பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத் தொன்றில் கொல்லப்பட்ட வீரர்களாலும் செங்கதிர் வெயிலால் உலர்ந்த அவர்தம் செங்குருதி யினாலும்............ இலையடர் காட்டின் இடையில் எதிர்பாரா விதத்தில் எதிர்ப்பட்ட போர்க்கள வீரரால் ஒளியில் வாங்கப் பட்டேன். கோகாலா மாவின் கோல நிறங்களால், பகுவின் பாங்குறு தேநீர் அதனால், ஏருந்து இயற்றும் அமைதி இளைஞரால், மண்ணைவிட்டு எழுப்பும் மிதப்பூர் தியினால் வாங்கப் பட்டேன். சுழல்பொறிக் கப்பலின் மிதவைத்தட் டிடத்தில் ஒருநாள் ஒருத்தி கூர்விழி பாய்ச்சி என்னை வாங்கினாள். (எந்த வலையினால் எனைப்பிடித் தாள்.என இன்னும் அறிகிலேன்.) இருந்தும், அன்று முதலாய் இளவே னிலால்என் வாழ்வை எண்ணுவேன். இன்இள வேனில் வன்கருஞ் சிட்டுகள் பறப்ப தனாலே அறிமுக மாகும். என்மகளே என்னை வாங்கினாள். இஃதொரு தொல்லை அன்றோ? என்னையும் அன்னையும் அன்றிப் பின்னை யாரிடம் பின்னி ஆடுவாள்? வடித்த வாளிலே பொறித்த சொற்களால் பிடித்தெனை வாங்கினான் கம்சதாவ். இடையில் அன்கரா அருவியால் வாங்கப் பட்டேன். மேலும், பாலன்கா, கிஃசியால் தெரிந்தவை தெரியா தவைகளால் வாங்கப் பட்டேன். துன்புற்றுப் பிறந்த என் பாடல் வரிகளால் எங்களின் தகுதியைப் பிறருடன் இணைத்து வையம் அறிந்திட வாங்கப் பட்டேன்.

160