பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இபற்ற ஆசிய ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் பேராயத்தின்போது இது மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அடுத்த எழுத்தாள் பேராயம் ஆல்மா - ஆட்டாவில் 1573ல் நடைபெற்றது. இன்று இதான்மையான ஆசிய ஆப்பிரிக்க மக்கள் பண்பாடுகள் ஒன்றுக் கொன்று ஒரு புதிய முறையில் வயமுறுநிலை பெற்றுள்ளன. ‘ரப்புக்கங்களிலும், பண்பாட்டுக் கருவூலங்களைப் ப்ரிமாறிக் கொள்ளும் முயற்சியும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் ஆர்வமும் தாம் காண்கிறோம். நாம் வந்துள்ள வழியைத் திரும்பிப் பார்த்தால் நாம் எவ்வளவு தொலைவு வந்திருக் சிஆர் என்பதைக்காட்டும். நட்புறவு இடையறாத எதிரெதிராக்கமும், பண்பாடுகள் பற்றிய பொருள் விளக்கங்களும் வாழ்க்கையில் எண்ணிட வேண்டிய ஒரு கூறாகிவிட்டது. கட்சியின் 28ஆம் பேராயம் நமது மக்கள் ஒரு புதிய வரலாற்றுச் சமுதாயத்தை, சோவியத்துப் பன்னாட்டு மக்களை உருவாக்கிடும் உண்மையைத் தனியாகக் குறிப்பிட்டது. வாழ்க்கையின் வேறுபாடுகள் புதிய செழுமையான ஆக்க வடிவங்களுக்கு வழிகோலுகின்றன. வடிவங்களில் வேறுபாடு இருக்கவே செய்கின்றன. அங்கே ஒரே உலகம் என்னும் உள்ள தென்பதுடன் அது தி ட் ட மா ன தேசியக் கூறுகளை முற்கருதுவதன்றி மாறாக அவற்றை அகற்ற எண்ணவில்லை. கட்சி எப்போதும் அக்டோபர்ப் புரட்சியின் நாள்களிலிருந்தே உயர்த்த அனைத்து நாட்டுத் தேசியத்தையே புகட்டி வத்துள்ளது. இன்றைய சோவியத்து மனிதனின் சதையும் இகுதியும் பன்னாட்டுத் தேசியத்தின்ட்யே உள்ளன என்று கூறி விடலாம்.

நம் இலக்கியத்தில் தொடக்கமுதல் இலக்கியம் மக்களோடு அதன் அமைப்பிலேயே இணைந்திருக்கவேண்டும் என்றும் அதே நேரம் அதில் (அனைத்து நாடுகளின்) தேசியம் குழைந்திருக்க வேண்டும் என்றும் நாம் கனவு கண்டோம். சோவியத்து எழுத்தாளர்களின் நூல்கள் நாடெங்கும் உலகெங்கும் வெற்றி நடையுடன் வீறுநடை போடுகின்றன.

நிக்கலை திக்கனொவ்

xviii