பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

காரா ஸெயித்லியேவ் துருக்மேனியா

(1915-1971)

துருக்மேனியன் முத்துகள்

மாதம் ஆறுமே கழிந்தன,

மலருமுன் பருத்தி மொட்டுகள்.

காதற் செங்கதிர் பருகி,

கண்ம லர்ந்தன ஒளியிலே.

பச்சை மணித்தழை இடையிலே

பருத்த முத்துகள் போலவே

இச்சை யாய்க்குடி யானவன்

கனவில் வாழ்ந்தன மொட்டுகள்.

மாந்த இன்பமும் துன்பமும்

மண்டி நிறைந்தது; பஞ்சினை

ஏந்து செடியெலாம் காற்றினால் இன்ப மாய்அசைந் தாடிடும்.

நாளை என்றுகாத் திராமலே,

நாளின் வைகறை முன்னமே

வேளை வந்தது என்று அறுவடை

மேவு வார்தமைப் போற்றுவோம்.

171