பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் ஒருமணி நேரமும்

மேவு பணித்துளி என்னவே

சால எண்ணியே நிலத்திடைத்

தான்ந டந்தனன் பண்ணையாள்.

குளிர்சூ றாவளி பேய்த்தனம்,

கொண்டு அரற்றுமுன், இலையுதிர்

தெளிவுக் காலந்தான் முடியுமுன்,

சேர்ந்தெடுப் போம்நாம் பருத்தியை.

நிலத்தின் எல்லைகள் வரையிலும், நெடுகச் சென்றிடும் நடைவழி

நிலத்தின் மண்அவன் வாழ்வென

நீண்ட காலமாய் ஆயின.

துருக்மே னியக்குடி யானவன்,

துாய நம்பிக்கை யாவுமே

பருத்தி மேல்அவன் வைத்துளான்,

பருத்தி யேஒளிப் பீடெலாம்.

இயற்கை யின்கலை யாவிலும்,

எழில்மி குந்திடல் பருத்தியே

முயற்சி, நம்பிக்கை, அச்சமும்,

முளைந்து ஒன்றாக்கிப் பிணைந்திடும்.

துருக்மே ணியநா டிலையுதிர்

காலப் பருத்தியால் ஓங்கிடும்

பெருவனப் புடைவெண் பருத்தியால் பள்ளத் தாக்குகள் பொலியுமே!

172