பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

அலி தொகம்பாயேவ் கிர்கீசியா

(19. 1994)

பின்னோர்க்கு

எதிர்கா லத்து மனிதா, என்றன் விருப்பம் உரைப்பேன்கேள், பதிப்பாய் உன்றன் நெஞ்சில் இஃதுன் மரபின் உடைமையடா.

புல்வெளி யூடும் பூங்காட் டூடும் தொடர்வண்டி ஒடுகையில், புல்வளர்ந் துள்ள கல்லறை கள்தமை அடிக்கடி காண்பாய்நீ.

போராண் மைபுகழ் பேசரும் பீடு பொலியும் களப்போரில் பேராண் மைதிகழ் நினைவுச் சின்னம் பிறங்கும் இருபாலும்.

யார்யார் கல்லறை அறியோம் பெயர்கள் போற்றிப் புகழ்ந்தாடப் பேர்சார் தந்தை பிறந்தோன் மகன் என்று உள்ளார் பலராக.........

2 12