பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளபல நாடனைத்தும் உளம்செ லுத்தி உவக்கின்றேன்; உயர்மலைகள் பள்ளத் தாக்கில் துள்ளுகின்றேன்; தோய்கின்றேன்; உலக னைத்தும் தோழமையால் தழுவுகின்றேன்; ஆனா லும் நான் அள்ளூறிப் பாடுகின்ற என்நாட் டின்முன் அவையெல்லாம் ஒளிமங்கிப் போவ தென்னே!

என்இனிய சோவியத்து நாடே, நின்றன் எழில்மிக்க செயல்நோக்கம் அனைத்தை யும்.நான், அன்புடனே பாடுகின்றேன்; தெளிந்த சொல்லால் அகம்துளய மொழியால் உன் பெருமை சொல்வேன். மன்னுபல காலமெலாம், வரலா றெல்லாம் மக்கள்தம் ஒன்றியமாய் நிற்பாய் நீயே.

போர்நமது பெருநாட்டை அலைத்து நின்ற பொல்லாத சூழலிலும் அறுப டாமல் பேர்உறவின் பிணைப்பானோம்! இனிமேல் என்ன? பிறங்கிடுமே நமதுகுடி யரசு கள்தாம், சீர்பெறும்அவ் வரசுகளுள் சியார்சி யாவே! சிறக்கின்ற முன்னணியில் நீஒன் றானாய்.

மன்பதையில் ஒளிர்கனவாய் என்றும் நிற்கும் மாண்புமிகு பொதுவுடைமைக் கொள்கை தன்னில் வன்பிடிப்பும் உண்மையும்நீ உடையை ஆனாய், வாள்துாக்கி முன்நின்றாய் இறுதி மட்டும். உன்புகழைப் பாடுகின்றேன்; என்றன் பாட்டின் உயர்கருவாய் என்றென்றும் நீயே நிற்பாய். என்இனிய கொடிமுந்திரித் தோட்டம் நீயே; என்றென்றும் உனைப்பேணி வளர்த்தின் றேனே.