பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இர்காலி அபாஷிட்சே ஜியார்சியா

(13, 1909)

இமைப்பொழுது அல்லது ஈறிலாக் காலம்

நோன்புற்று வீறார்ந்து சுழன்றோடி நிற்கும் ஊழுழிக் காலத்தின் தொகுப்போடும் காணில் ஊன்பெற்ற வாழ்க்கைஇது தோன்றிமறைந் தோடும் ஒருதென்றல் விருந்தன்றி வேறொன்றும் இலையே.

எனினும் நம் வாழ்நாள்கள் ஈறிலவாய்த் தோன்றும்: ஏகினைநீ நெடுந்தொலைவு, மீண்டும்செல வேண்டும். பிணைந்துள்ள பேரின்ப துன்பங்கள் சுவைத்துப் பெருநினைவில் வாழ்கின்றாய் பழமையினை எண்ணி.

திடும்என்றா பிரிவுவரும்? நம்புதற்குஒண் ணாதே; திருந்தாத நடைபயிலும் சிறுபருவ நாளில், தொடுத்தஇள மூங்கில்புனை சிறுவண்டி இழுத்துத் தொலைவான வாழ்க்கையதன் பயணத்தைத் தொடர்ந்த வாழ்நாளும் நூற்றாண்டு பலவாகத் தோன்றும்.

அரைநூற்றாண் டுக்காலம் உன் பின்னால் உண்டே, வாழ்க்கைமரம் இலைகளினை ஒவ்வொன்றாய் உதிர்க்கும்; முறையாக இன்பத்தும் துன்பத்தும் பழகல் உனக்கொன்றோ எல்லோர்க்கும் பொதுநிகழ்வே வாழ்க்கை.

வாழ்நாளில் நடைமுறையில் செயல்தொடர்பில் எல்லாம் யாரிடத்தும் எவ்விடத்தும் நேர்மையினைக் கொண்டாய். வாழ்க்கைக்கும் எப்பெயரை நீகுட்டு விப்பாய், இமைப்பொழுதோ ஈறில்லாக் காலமோ நீ தேர்வாய்.