பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

பாவல் ஆண்டகொலஸ்கி உருசியக்

கூட்டரசு (1%. 1896)

வருந்தும் நிலை......

என்பாட்டன் தனையறியேன் வருத்தம்இது அன்றோ? முப்பாட்ட னையும்அறியேன் தொடர்பற்றுப் போச்சு. முன்னோர்க்கும் பின்னோர்க்கும் ஒட்டுறவுஇங்கு இல்லை; முறையான இயற்கைஉறவு இல்லை என்றே தோன்றும்.

ஆனாலும் பேரன்பின் பேரனுடைப் பேரன் ஆகஅவர் என்னுள்ளே முதிர்ந்துவரு கின்றார். வானாக என்இளமை நிலையாத போழ்து வாகிளமைப் பாங்களித்து நிலைபெறவே செய்தார்.

என்னுள்ளே தழைத்தினிது மகிழ்ச்சிஒலி கொஞ்சும் இளவேனில் காடுகளின் தெளிவற்ற இசைகள் முன்னுள்ள மீட்பினையும், இறந்தபுது உயிர்ப்பில் முகிழ்த்தலையும் ஆண்டுதொறும் கூட்டுவிக்கும் மாதோ.

மழைக்கால மாலையிலே மரவேர்போல், அன்னார் வளங்கொழிக்கும் சாரம்என்பால் உறிஞ்சுதல்போல், இனிமேல் கிழப்பருவம் எய்தியபின் முதியஒரு நாய்போல் கிளரும்அவர் கணப்பருகில் குளிர்காய்ந் திருப்பேன்.

I 3