பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

மிகொலா பாஷான் உக்ரைன்

(0. 1904)

அழியாப் பாறை

பசுமை முடிமீது பசுமைமுடி ஒன்றெனவே ஒசிந்துயரும் சிறகாய், கூர்பொம்மை நரம்பலைகள், விசும்புயரப் பாறைக்கு மாலை வளையமிடும், பசுமையிலாச் சாட்டைகள்போல் கட்டின்றி வளர்ந்திடுமே.

இத்தகைய பிணைப்புகளால் யாராலும் கேடடையா வித்தின்றி ஓங்கி நிமிர்ந்துயர்ந்த பாறையிது; உய்த்தநில நடுக்கத்தால் ஒன்றும் அசையாது, கத்திவிழும் வான்இடிக்கும் சற்றும் கலங்காதே.

முகத்தோடு முகம்இணைந்து, விளிம்போடு விளிம்புடனே மிகப்பிணைந்து, மேன்மைத் திறம்வாய்ந்த கைகளினால் புகழ்மிகுந்த காட்டாறு, பாறைகட்குக் கொடுமுடியாய் மிகுகின்ற சாலைஇரைச் சலுக்கப் பால்ஒளிரும்.

விண்ணுறவே மேலோங்கி வேட்கும் இமர்சியாவின் கண்ணுறவே கதிர்ஒளியின் காட்சி கலந்ததுவே: மண்ணிருந்து உயர்ந்தோங்கி மணிமுடி கொண்டதுபோல் பண்ணும்ஒளி கமழ்பள்ளத் தாக்கில் படர்ந்தெழுமே.

20