பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

பாவல் போட்ஸ்- மால்டேவியா

(பி. 1933)

காலைப் பாட்டு

அனைத்திற் கும்மேல், அதிகா லைகளைப் பாடுகிறேன். பலகணி ஊடே பணிசேர் வழியால் பார்த்திருக்கும் தொழில்மனைச் சங்கின் ஒலியல் புத்துணர் வூட்டிவிடும் காடு விழித்து முணுமுணுப் பாலே களைகட்டும் கனிவிண் மீன்கள் தரையில் வீழ்ந்து சலசலக்கும்.

அனைத்திற் கும்மேல் அதிகா லைகளைப் பாடுகிறேன். வாயில் அருகு காத்திருக் கும்நல் பாதைகளும் உறங்கி இருக்கும் ஆர்வமும் எண்ணமும் உடனுறையும் அந்தக் காலைகள் அவற்றின் அழகைப் பாடுகிறேன். இற்றைப் பகலிற் செய்தற் குரியன இவ்வளவே. சுடச்சுட வெந்த அடையினைப் பலசுறு ஆக்குதல்போல் பலப்பல கூறாய் ஒருநாள் பொழுதைப் பகுக்கோமோ!

இராஒரு நரியாம்; இருண்டதன் காலடி நக்கிடுமே எப்படி வைகறை விளிம்பை நோக்கிப் பதுங்கிடுமே பயன்தரு மரங்கள் வளங்கள் உதிர உலுக்கிடுமே வாயில் நின்றே உறங்கும் போப்லார் மரங்களவை விண்ணின் வெள்ளிப் பணித்துளி சிதறும் வியப்புறவே.

29