பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைத்திற் கும்மேல் அதிகா லைகளைப் பாடுகிறேன்; வியப்புடன் சாலை வழிகள் விழிக்கக் காண்கின்றேன். பலகணி விளிம்பில் தவிடு பொறுக்க முனைந்துநிற்கும் பகற்பொழு துடன்பிறந் தார்களைப் பார்த்து மகிழ்ந்தபடி இரவுப் பறவைகள் கூடுகள் நோக்கித் திரும்பினவே.

விடிவான் எங்கும் வைகறை முரசொலி ஆர்த்ததுவே தெப்பக் காரரே, கேணிகள் அகழும் தோழர்களே, செங்கல் அறுப்பீர், உழவீர், செஞ்சொற் பாவலரே! உங்கள் வேளை வந்தது வந்தது எழுவீரே! இளங்கதிர்க் கீற்றுப் போல் நிமிர்ந் தெழுவீர்! எழுவீரே! முந்திரிக் கொடிகள் முளைத்துச் செழிக்க முனைவீரே குழந்தைகள் விழியுள் புத்தொளி மின்ன ஒளியுலகம் விழைந்தவாறுஅங்குத் துயிலிலும் வளர்வதைக் காணிரே... அனைத்திற் கும்மேல் அதிகா லைகளைப் பாடுகிறேன்.

30