பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுப்புகள் அற்றே உலகம் முழுமை ஆனதுகாண் இற்றை நாளைப் பகுத்துப் பார்த்திட முடியாதே. வருங்கா லம்என் குறிக்கோட்கு உரியது ஆதலினால் வாழும் நெஞ்சம் அன்பால் என்றும் கனிவுறுமே.

வருங்கா லத்தின் தோற்றக் காட்சி நிறுத்திடவே நெஞ்சின் நினைவே, என்றன் உயிரைக் கிளர்த்திவிடு; கமுக்க மானஎன் அச்சம் பனியால் கழுவிடுவாய், கடந்த காலத் துன்பமும் நீயே களைகுவையே.

அன்பின் அழைப்பிற்கு அன்போடு அளிக்க வேண்டும்விடை அப்போழுது அன்றோ நெஞ்சொடு நெஞ்சம் சென்றடையும். ஒன்றும தகுதி உடையே னாயின் உலகரெலாம் உடன்பிறந் தோராய்த் திகழும் விழாவினைக் காண்குவனே.

s *       8 
   *               * * 

4. உரியநம் நிலத்தை ஒம்புதல் விட்டோம்

மக்களே மக்களே உணர்வீர், துருப்பிடித் திட்ட கத்தியால் அன்னை

வயிற்றினைக் குத்துதல் பித்தே.

கதிரவன் ஒளியால் கைபடா முன்பே

காய்ந்திடும் பனித்துளி மரத்தில், அதிரவிண் வெளிக்குள் ஏகுவோம், வானம் அன்பனுக்கு இடம்தரும் உவந்தே.

அன்புசால் வெற்றி வாகையால் நெஞ்சம்

அகமலி உவகையால் சிலிர்க்கும் அன்னமும ஆன்மத் துய்மையைக் காண அகமகிழ்ந்து உலவுவாள் இங்கே.

வெளிப்படைப் பண்பு வென்றிடும் நாங்கள்

பொய்புரட்டு உளறலை வெறுப்போம் களிதரும் அன்பு கண்டிடப் புலவர்

அறிவரும் ஒன்றினர் போரில்.

48