பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

எவ்கெனி எவ்திஷெங்கோ உருசியக் கூட்டரசு (ta. 19)

பிர்ச்சு மரம்

தனிஒரு வேட்டைக் காரன் தொலைவில்

தானே சுட்டனனே,

பணியினை நோக்கிக் குண்டின் உறையினைப்

பட்டெனப் பாய்ச்சினனே.

உரத்தெழு நடுக்கம் பணிவிழு துடே

உள்ளே புகுந்ததுவே, உறைபனி அடியில் வெளிறிய கிளைகளை

உலுக்கி முழங்கியதே.

முன்பொரு மகன்போல் கட்டுண் டிருந்த

முதிராப் பிர்ச்சுமரம்

இன்றுபுண் ஏற்ற பட்டையின் ஊடே

இனிதொளி பொழிகிறதே.

குண்டுப் பொறியின் நடுக்கத் தாலே

கொண்டஉள் செழுமைஎலாம் எண்ணக் கணத்துள் எல்லா வற்றையும்

இழிய விடுகின்றதே.

49