பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 107 தாகவும், அங்கே போய் வேடிக்கை பார்ப்பதற்காகவே ஜனங்கள் எழுந்து போகிறார்களென்றும் சிலர் சொன்னார்கள். அதைக் கேட்க, அங்கே இருந்த மற்ற ஜனங்களும் நாங்களும் நிரம்பவும் பயமும் கவலையும் ஆச்சரியமும் அடைந்தோம். எங்களுக்கு ஆகவேண்டிய சடங்குகளைச் சீக்கிரம் முடித்துக்கொள்ளவும் வெளியில் போய் போலீசார் என்ன செய்கிறார்களென்பதைப் பார்க்கவும் எல்லோரும் ஆவல் கொண்டு, மிகுதியிருந்த சடங்குகளைச் சீக்கிரமாக முடித்துக் கொண்டிருக்கையில், போலீஸ் ஜெவான்களில் மூன்று பேர் நாங்கள் இருந்த இடத்துக்கே வந்துவிட்டார்கள். அவர்களைக் கண்டவுடன் எங்களுடைய உடம்பு நடுங்கியது. மனசில் பெருத்த திகில் உண்டாயிற்று. எங்களண்டையில் வந்த ஜெவான்கள் நாங்கள் இருந்த ஊஞ்சல் பலகையண்டை நெருங்கி வந்து என் புருஷருடைய கைகளை நீட்டச் செய்து அவருடைய விரல்களில் இருந்த மோதிரங்களைப் பார்த்துவிட்டு, அவைகளுள் விலை அதிகமாய் பெறத்தக்கதாயிருந்த ஒரு மோதிரத்தைக் கழற்றிக் கொடுக்கும்படிக் கேட்டார்கள். அந்த மோதிரம் கலியான காலத்தில் என் பெரிய தகப்பனார் பிள்ளை இரவலாக என் புருஷனுடைய கையில் போட்டு வைத்திருந்தார். அந்த மோதிரத்தை அவர்கள் கேட்கவே, என் பெரிய தகப்பனாரு டைய வீட்டை அவர்கள் சோதனை போட்டதாக கொஞ்ச நேரத்திற்குமுன் சொன்னதற்கும், மோதிரத்துக்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறதென்று எல்லோரும் நினைத்துக்கொண்டனர். என் புருஷர் உடனே அந்த மோதிரத்தைக் கழற்றி ஜெவான்களி டம் கொடுக்க, அவர்கள் அதை வாங்கிக்கொண்டு வெளியில் போய்விட்டார்கள். போனவர்கள் ஐந்து நிமிஷ நேரத்தில் திரும்பி வந்து அந்த மோதிர சம்பந்தமாக என் புருஷரைக் கைதி செய்திருப்பதாகச் சொல்லி, அவரைப் பிடித்து மரியாதைக் குறைவாக இழுத்துக் கொண்டு என் பெரிய தகப்பனாருடைய வீட்டுக்குப்போய், அங்கே இருந்த என் பெரிய தகப்பனாருடைய பிள்ளையையும் என் புருஷரையும் சில சொத்துக்களோடு நடத்தியழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விட்டார்கள். என் தகப்பனார் வெளியில்போய் விசாரித்ததில், எங்களுடைய கலியாணத்துக்குச் சில தினங்களுக்கு முன்பு, என்