பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iC3 செளந்தர கோகிலம் பெரிய தகப்பனார் மகன் யாரோ ஒருவருடைய வீட்டில் கன்னம் வைத்து உள்ளே நுழைந்து சில சாமான்களையும் நகைகளையும் திருடிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் ஒளித்து வைத்திருந்ததாகவும், போலீஸார் எப்படியோ உளவறிந்து வந்து சோதனை போட்டு, சொத்துக்களைக் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு போனதாகவும், என் புருஷரையும் அழைத்துக் கொண்டு போனதாகவும், என் தகப்பனார் கேள்வியுற்றார். அதற்குப் பிறகு அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. என் பெரிய தகப்பனாரும் என் தகப்பனாரும் தலைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் செலவு செய்து எதிர்க்கட்சியாடினார்கள். என் புருஷர் உண்மையிலேயே அந்தத் திருட்டில் சேரவில்லை. அவருக்கு மோதிரம் இரவல் கொடுக்கப்பட்டதென்று என் பெரிய தகப்பனாருடைய மகன் ஒப்புக்கொண்டான். ஆனாலும், போலீஸ்காரர் அவனை அடித்து வைது பயமுறுத்தி, என் புருஷரும் அந்தத் திருட்டில் சம்பந்தப்பட்டவரென்று சொல்லும் படிச் செய்துவிட்டார்கள். என் பெரிய தகப்பனார் மகன் இரண்டு வருஷ தண்டனையும், என் புருஷர் ஒரு வருஷ தண்டனையும் அடைந்தார்கள். எங்களுடைய அவமானமும் துயரமும் எப்படி இருந்திருக்குமென்று நீங்களே யோசித்துப் பாருங்கள். நானும் என் தாய் தகப்பன்மாரும் அந்த ஒருவருஷ காலம் முழுவதையும் அழுதழுதே போக்கினோம். நாங்கள் சரியான காலத்தில் குளிக்காமல், முழுகாமல், சாப்பிடாமல் வியாகுலப்பட்டு இளைத்துப் போனோம். அந்த ஒரு வருஷகாலம் தீர்ந்தவுடன், என் புருஷர் சிறையிலிருந்து வெளியில் வந்தார். என் தகப்பனார் சிறைச்சாலை வாசலுக்குப் போய் வண்டியில் என் புருஷரை உட்காரவைத்து எங்களுடைய வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். பரம ஸாதுவும் மானியுமான என் புருஷர் எங்களுடைய முகத்தில் விழிப்பதற்குக்கூட நிரம்பவும் கிலேசமடைந்து குன்றிப் போனார். ஏதோ காலவித்தியாசத் தினால் அந்தக் கெடுதல் நேர்ந்துவிட்டதென்றும், அவர் விஷயத்தில் எங்களுக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லையென்றும் நாங்கள் பலமுறை சொல்லிச் சொல்லி அவரைத் தேற்றினோம். நான் புத்தியறிந்து கிட்டத்தட்ட இரண்டு வருஷகாலம் கழிந்து விட்டது. ஆகையால், எனக்கும் அவருக்கும் சாந்திகழிக்க