பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காங்கிமதி யம்மாள், ராஜா பகதுர் 109 . வேண்டுமென்று எங்கள் தாய் தகப்பன்மார் தீர்மானித்து, எங்களுடைய புரோகிதரை வரவழைத்து ஒரு முகூர்த்த நாள் குறித்தார்கள். அந்த நாள் சுமார் பதினைந்து தினங்களுக்கு அப்பால் வந்தது. என் புருஷர் பகல் காலங்களில் வீட்டிற்குள் ளேயே இருப்பதும், இராக் காலங்களில் மாத்திரம் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொள்ளுவதுமாயிருந்தார். அவர் சிறைச்சாலையிலிருந்து வெளிப்பட்ட பிறகு பத்தாவது நாள் போலீஸ் ஸ்டேஷனிலிருந்த ஏட் ஐயா ஒருவரும் இன்னம் மூன்று ஜெவான்களும் எங்களுடைய வீட்டுக்கு வந்து, என் தகப்பனாரைக் கூப்பிட்டு எங்கள் வீட்டைச் சோதனை போடவேண்டுமென்றார்கள். மடியில் கனமிருந்தாலல்லவா வழியில் பயம். எங்களுக்கும் என் புருஷருக்கும் அதைப்பற்றி பயமே உண்டாகவில்லை. "நீங்கள் குசாலாய்ச் சோதனை போட்டுக் கொள்ளுங்கள்' என்று நாங்கள் சொல்லிவிட்டோம். ஒரு ஜெவான் என் புருஷரை ஒரிடத்தில் இருக்கச் செய்து அவருக்குக் காவலாக அங்கேயே இருந்தான். மற்றவர்கள் எங்களுடைய வீட்டுக்குள் புகுந்து இண்டு இடுக்கு மூலை முடக்குகளில் எல்லாம் இருந்த பெட்டி பேழை அடுக்குப்பானை தட்டுமுட்டு சாமான்கள் ஆகிய எல்லாவற்றையும் எடுத்துக்கடை பரப்பித் தாறுமாறாகப் போட்டுச் சோதனை செய்தார்கள். கடைசியாக ஒரு சேவகன் பரண்மேலேறி அவ்விடத்திலிருந்த எருமூட்டைகள் விறகுகள் முதலியவற்றையெல்லாம் கீழே தள்ளிவிட்டான். அவைகளுக்குள்ளிருந்து ஒரு துணி மூட்டையும் கீழே விழுந்தது. போலீசார் அதை எடுத்துக்கொண்டு வீட்டு வாசலுக்கு வந்து பலர் முன்பு வைத்து அவிழ்த்துப் பார்க்க, சுமார் ஐநூறு ரூபாய் பெறத்தக்க நகைகள் அதற்குள் இருந்தன. உடனே ஏட் ஐயாவுக்குப் பலமான ஆவேசம் வந்துவிட்டது. ஜெவானு டைய காவலிலிருந்த என் புருஷரிடம் அந்த ஏட் ஒடி வந்து அவருடைய தலைமயிரைக் கெட்டியாய் இடதுகையால் பிடித்துக்கொண்டு, வலது கையால் பளிர்பளிரென்று எனது புருஷருடைய கன்னத்தில் அடித்து, விலாவில் குத்தி, காலால் துடையைப் பார்த்து உதைத்துப் பலவாறு இம்சித்துப் பல்லை நறநறவென்று கடித்து, 'அடா பயலே! நீ ஜெயிலிலிருந்து வந்த சரியாய்ப் பத்து நாள் கூட இன்னம் ஆகவில்லை. உன் திருட்டுப்