பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iić செளந்தர கோகிலம் புத்தி இன்னமும் போகவில்லையே! இந்த நகைகளையெல்லாம் திருடி மூட்டையாகக் கட்டிக்கொண்டு வந்து வைத்துக் கொண்டிருக்கிறாயே, போ, நாயே, போ கச்சேரிக்கு” என்று சொல்லி அதட்டிப் பலவாறு வதைக்க, என் புருஷர் அப்படியே குன்றிப்போய், 'ஐயா நான் ஒரு பாவத்தையும் அறியேன்! சத்தியமாகச் சொல்லுகிறேன். இந்த மூட்டையை நான் இப்போதுதான் பார்க்கிறேன். இதற்கு முன் பார்த்ததேயில்லை” என்று பணிவாகச் சொன்னார். அதைக் கேட்ட ஏட்ஐயாவுக்கு கோபம் இன்னம் அதிகமாய் வந்துவிட்டது. அவர் மறுபடி என் புருஷருடைய முகத்தில் பேய்போல அறையவே, அவருடைய மூக்கு உடைந்துபோனமையால் இரத்தம் கடகடவென்று ஓடி வந்தது. அந்த வதையைக் கண்ட நாங்களெல்லோரும் ஐயோ அப்பா வென்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறி அந்தப் போலீஸாரின் காலில் விழுந்து கெஞ்சினோம். அவர்கள் எங்களை உதறித் தள்ளிவிட்டு, நகை மூட்டையை எடுத்துக் கொண்டு என் புருஷருக்கு விலங்கிட்டு அவரை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்விட்டார்கள். என் புருஷர் குற்றவாளியே அல்லரென்பது எங்களெல்லோருக்கும் அவருடைய தாய் தகப்பன்மாருக்கும் நிச்சயமாய்த் தெரியும். ஆகையால், எப்பாடுபட்டாவது அவரை மீட்க வேண்டுமென்ற முடிவு செய்து கொண்டு இரண்டு வீட்டுச் சொத்துக்களை எல்லாம் செலவிட்டுக் கடைசி வரையில் பிரயாசைப்பட்டுப் பார்த்தோம். எங்களுடைய முயற்சி எல்லாம் பலிக்காமல் வீணாய்ப் போய்விட்டது. போலீசாரால் தயாரிக்கப்பட்டிருந்த பொய்ச்சாட்சிகள் சொன்னதை நியாயாதிபதி உண்மையென்று நம்பி என் புருஷர் குற்றவாளிதான் என்று நிச்சயித்து அவரைத் தண்டித்துவிட்டார். அதற்கு முன் அவர் ஒரு வருஷகாலம் சிறைப்பட்டிருந்தவர். ஆகையால், அதையும் கருதி, அந்த இரண்டாவது திருட்டுக்கு ஏழு வருஷ கால தண்டனை கொடுத்துவிட்டார். அவருக்காக வழக்காடியதால் எங்கள் சொத்து சுதந்திரங்களும், அதுபோலவே, என் புருஷர் வீட்டுச் சொத்து சுதந்திரங்களும் எல்லாம் அடியோடு போய்விட்டமை யாலும் என் புருஷருக்கு அநியாயமாக அவ்வளவு கடுமையான தண்டனை கிடைத்துவிட்டதே என்ற ஏக்கத்தினாலும்,