பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 111 அவமானத்தினாலும் என்னுடைய தாய்தகப்பன்மாரும், மாமன் மாமியாரும் பெருத்த வியாகுலத்தில் விழுந்து இரவு பகல் உருகி உருகி ஒருவர் பின்னொருவராய் இறந்து போய்விட்டார்கள். நான் மாத்திரம் இன்னம் இருந்து என் ஆயுசு காலம் முடியத் துயரத்தில் ஆழ்ந்து கிடக்கவேண்டுமென்று கடவுள் என் தலையில் எழுதிவிட்டார் போலிருக்கிறது. நான் எத்தனை நாள் பட்டினி கிடந்தாலும், என் உடம்பை எப்படி வதைத்தாலும் என் பிராணன் மாத்திரம் போகவில்லை. எங்கள் வீடும் போய்விட்டது; சொந்த ஜனங்களும் போய்விட்டார்கள். நான் மாத்திரம் திக்கற்ற பாவியாய் இருந்து ஜீவனம் செய்ய நேர்ந்தது. நான் இரண்டு பெரிய மனிதர்களுடைய வீட்டில் வாசல் பெருக்கும் உத்தியோகம் செய்து, ஒழிந்த நேரத்தில் கூவிக்கு நெல்குத்தி உழைத்து மானமாய் ஜீவனம் செய்து, மிச்சப் பட்டதைச் சீட்டுப்போட்டேன். மாதம் 4-அணா வாடகை கொடுத்து நான் ஒருவருடைய வீட்டுப் பின்புறத்திலிருந்த குடிசையில் குடியிருந்து வந்தேன். ஏழு வருஷ காலம் எப்போது கழியுமென்று நான் நாள்களை எண்ணிக்கொண்டே இருந்தேன். என் புருஷர் உலகத்தாருடைய கண்ணுக்குக் குற்றவாளியாகத் தோன்றினாலும், என் மனசார அவர் நிரபராதி என்பது நிச்சயமாக என் மனசிற்பட்டது. ஆகையால், நான் அவர்மேல் வைத்திருந்த ஆசை நாளுக்குநாள் வளர்ந்து மலைபோலப் பெருகிக்கொண்டே இருந்தது. நான் அரும்பாடுபட்டு என்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொண்டு, அந்த ஏழு வருஷகாலம் எப்போது தொலையுமோவென்று இரவு பகல் அதே தியானமாய் இருந்தேன். என் புருஷர் என்னிடம் கேடிமமாய் வந்து சேரவேண்டுமென்று நான் எங்கள் குல தெய்வமாகிய ஐயனாரப்பனைப் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தேன். ஏழு வருஷகாலம் முடிந்தது. நான் பல தினங்கள் சிறைச்சாலை வாசலில் போய் நின்று அவருடைய வருகைக்காக ஆவலோடு காத்திருந்து அவரை அழைத்துக்கொண்டு என் குடிசைக்கு வந்து சேர்ந்தேன். நான் நெல்குத்தி சீட்டுப் போட்டதில் என்னிடம் பத்து வராகன் பணம் சேர்ந்திருந்தது. அதை வைத்துக்கொண்டு செலவு செய்து, நான் அவரிடம் வைத்திருந்த மதிப்பையும் வாஞ்சையையும் வெளியிட்டு, என்