பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 செளந்தர கோகிலம் மென்றே எதிர்பார்க்கிறேன். அந்தப் புதிய உத்தியோகத்திற்கு நல்ல படிப்பாளியாகப் பார்த்து ஒருவரை நேராக நியமிக்க வேண்டுமென்பது மகாராஜனுடைய எண்ணமாய் இருக்கலாம். இந்த சமஸ்தானத்தில் இப்போது இருக்கும் இன்ஸ்பெக்டர்களுள் அதிகத் திறமை வாய்ந்தவர் யாரோ அவரை நியமிக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். நம்முடைய சமஸ்தானத்தில் உள்ள இன்ஸ்பெக்டரின் ஜாப்தாவொன்றை நான் தருவித்துப் பார்த்ததில் உம்முடைய பெயர் ருக்மாங்கத முதலியார் என்றும் உம்முடைய சொந்த இடம் தஞ்சாவூர் என்றும் எழுதப் பட்டிருந்தன. அந்த விவரத்தைப் பார்த்தவுடனே, எல்லோரிலும் நீரே திறமைசாலியாக இருப்பீரென்று நான் உடனே தீர்மானித்துக்கொண்டு, உமக்கே இந்த வேலையைக் கொடுக்க வேண்டுமென்ற நினைப்போடு உம்மை வரவழைத்தேன். இந்தக் காலத்தில் நம்மவர்களுக்குள் ஜாதியபிமானம் குறைந்து போய்விட்டது. வெள்ளைக்காரர்களைப் பாரும்! அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல், எவ்வளவோ உதவி செய்து ஒருவரையொருவர் உத்தியோகத்தில் ஆகாசத்தில் தூக்கி விடுகிறார்கள். அப்படிச்செய்ய நம்மவர்கள் பயப்படுகிறார்கள். சுயஜாதியார் ஒருவருக்கு வேலை செய்து கொடுத்தால் தன்னுடைய வேலை போய்விடப் போகிறதே என்கிற பயமும் சுயநலமுமே பெரிதாக இருந்து வருகின்றன. என் சுபாவம் அப்படிப்பட்டதல்ல. காற்றுள்ளபோதே துாற்றிக்கொள்ள வேண்டுமென்பது என்னுடைய கொள்கை. நம்மிடம் அதிகாரம் இருக்கிற வரையில் நம்மாலான உதவிகளை நம்முடைய சுயஜாதி மனிதர்களுக்குச் செய்யவேண்டும் என்பது என்னுடைய ஆசை. நான் இந்த வேலையை உமக்குச் செய்துவைக்கிறேன். நீர் எனக்கு அவமானம் தேடி வைக்காமல் திறமையாக நடந்து கொள்வீரா? உம்முடைய தர்பாரில் நீர் ஏராளமான குற்றவாளி களைப் பிடித்துத் தண்டனைக்குக் கொண்டு வரவேண்டும். வழக்கு பொய்யானதோ நிஜமானதோ அதைப்பற்றி அக்கறையில்லை. நீர் தண்டனை செய்துவைத்த வழக்குகளின் தொகை பெரிய தொகையாக இருக்க வேண்டும். அந்த வாக்குறுதியை நீர் எனக்குச் செய்து கொடுப்பிரா?' என்றார். அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் ஆநந்தத்தினால் மெய்ம்மறந்துபோய், "அவசியம்