பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பககார் 123 நான் தங்கள் பிரியப்படி நடந்துகொள்ளுவேன். என்னால் தங்களுக்கு ஒரு நாளும் கெட்ட பெயர் வரவே வராது. மகா திறமைசாலியான இன்ஸ்பெக்டரை திவான் நியமித்தார் என்று எல்லோரும் தங்களைப் புகழும்படி நான் வெகு சீக்கிரத்தில் செய்வேன் என்பதைத் தாங்கள் உறுதியாக வைத்துக் கொள்ளலாம்” என்றார். to go அதைக் கேட்ட திவான் முகமலர்ச்சி காட்டி, சரி; சந்தோஷம். உமக்கே நான் இந்த வேலையைச் செய்து வைக்கிறேன். உம்மை இந்த உத்தியோகத்தில் நியமிப்பதற்கு நான் உம்மைப்பற்றி ஏதாவது சிபார்சு செய்யவேண்டும். ஆகையால் உம்முடைய வரலாறு கொஞ்சம் எனக்குத் தெரியவேண்டும். நீர் முதலில் என்ன வேலையில் இருந்தீர்? பிறகு என்னென்ன வேலைக்கு உயர்த்தப்பட்டு இந்த இன்ஸ்பெக்டர் வேலைக்கு வந்தீர்? நீர் ஏதாவது நல்ல வழக்குகளில் குற்றவாளிகளை தண்டனைக்குக் கொண்டு வந்து உத்தியோக உயர்வை அடைந்ததுண்டா? நீர் ஏதாவது பொய் வழக்கு ஜோடித்து நியாயாதிபதிக்குத் தெரியாதபடி திறமையாக அதை நடத்தி, கைதிகளைத் தண்டித்ததுண்டா? எல்லா விவரங்களையும் என்னிடம் நீர் உள்ளபடி சொல்லவேண்டும். உம்முடைய சாமார்த்தியம் எவ்வளவு என்பது என் மனசாரத் தெரியவேண்டும். நீர் பொய் வழக்கு ஜோடித்ததைப்பற்றி நான் உம்மேல் கோபங் கொள்வேன் என்று நீர் கொஞ்சமும் பயப்பட வேண்டாம். இந்தப் போவீஸ் இலாகாவில் பொருத்தமாகப் பொய் சொல்வதும், நிஜம்போலக் குற்றவாளிகளை நிர்மாணம் செய்வதும் இகழ்வல்ல. அதுதான் போலீசாருக்கு அத்தியாவசியமான யோக்கியதை. ஆகையால், நீர் என்னிடம் எதையும் ஒளிக்காமல் உண்மையைச் சொல்லலாம். நீர் ஆதியிலிருந்து நடத்திய எல்லா வழக்குகளை யும் சொல்லவேண்டாம். அவைகளைக் கேட்க, எனக்கு இப்போது அவகாசமில்லை. கடைசியிலிருந்து சில வழக்குகளைச் சொல்லும்” என்றார். அவர் கூறியது உண்மையென்றே நம்பிய போலீஸ் இன்ஸ்பெக்டர், 'எஜமானுக்குத் தெரியாத விஷயம்