பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i24 செளந்தர கோகிலம் ஒன்றுமில்லை. போலீஸ் இலாகாவில் பொய் சொன்னால்தான் நல்ல பெயரும் உத்தியோக உயர்வும் ஏற்படுகின்றன. பொய் சொல்லாமல், உண்மையாய் நடக்கிறவர்கள் வெகுசீக்கிரம் தம்முடைய உத்தியோகத்தையும் இழந்து வீட்டுக்குப்போய்ச் சேரவேண்டியிருக்கிறது. நான் முதன் முதலில் 4-வது வகுப்பு ஜெவான் வேலையில் அமர்ந்தேன், என்னோடு கூட ஜெவான் ஏட்டு முதலிய வேலைகளுக்கு வந்தவர்களும், எனக்கு முன்னாகவே வேலைகளில் இருந்தவர்களும் இன்னமும் அதே நிலைமையில் இருந்து வருகிறார்கள். நான் கண்டுபிடித்து நியாயஸ்தலத்துக்கு அனுப்பிய குற்றவாளிகள் எல்லோரும் தவறாமல் தண்டனை அடைந்துவிட்டார்கள். ஒவ்வொரு வழக்குக்கு ஒவ்வொரு படியாக என் உத்தியோகம் உயர்ந்தது. நான் வெகு சீக்கிரத்தில் முதல் வகுப்பு ஜெவான் ஆனேன்; பிறகு கடைசி வகுப்பு ஏட்டு வேலைக்கு வந்து படிப்படியாக உயர்ந்து முதல்வகுப்பு ஏட்டு ஆனேன். அதிலிருந்து எனக்குக் கடைசி வகுப்பு இன்ஸ்பெக்டர் உத்தியோகம் கிடைத்தது. நேற்றைய தினம் சிந்தா நாஸ்தி என்ற ஊரிலுள்ள ஒரு கள்ளனுக்கு ஒரு வழக்கில் பத்து வருஷ தண்டனை செய்து வைத்தேன். அதனால் எனக்கு முதல் வகுப்பு இன்ஸ்பெக்டர் வேலை ஆகுமென்று நினைத்திருந்தேன். இந்தச் சமயத்தில் புதிதாய் ஒரு சூபரின் டென்டெண்டு வேலையை உற்பத்தி செய்யப்போவதாய்த் தாங்கள் சொல்லுகிறீர்கள்? அந்த வழக்கில் நான் குற்றவாளியைத் தண்டனைக்குக் கொண்டுவந்த திறமையையே தாங்கள் ஆதாரமாக வைத்துக்கொண்டு அந்த சூபரின்டென்டெண்ட் வேலையைச் செய்து வைக்கலாம்” என்றார். திவான் : (சந்தோஷமாகப் புன்னகை செய்து) ஒகோ! அப்படியா! நல்லதாயிற்று. அதுவே போதுமானது. அந்தக் கள்ளன் என்ன குற்றம் செய்தான்? இன்ஸ்பெக்டர் : அவன் இரண்டு ஆடுகளைத் திருடி விற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டான். திவான் : (புன்னகையோடு) அவன் குற்றம் சுமத்தப் பட்டான் என்றால், உண்மையில் அவன் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லையென்று அர்த்தம் ஆகிறது. அப்படித்தானே?