பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 131 ஆகிய இருவரது குடும்பத்து ஜனங்களெல்லோரும் இறந்து போனார்கள், குடும்ப சொத்துக்கள் எல்லாம் விரயமாயிற்று. அவர்கள் இருவரும் மானமாய் ஜீவனம் செய்வதற்கும் வகை இல்லாமல் போனதோடு அவர்களுடைய இல்லற வாழ்க்கையும் சுகமும் இல்லாமல் போயின. இத்தனைக்கும் காரணபூதரான உம்மை மரண தண்டனைக்கு ஆளாக்கினாலும், அது அத்தனை நஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் ஈடாகாது. சட்டப்படி இந்தக் குற்றத்திற்கு மரண தண்டனை இல்லையென்று நான் விசனிப்பதோடு, உமக்குப் பத்து வருஷம் கடினக்காவல் சிறை கொடுக்கும்படி உத்தரவு செய்வதன்றி, பாங்கியிலிருக்கும் உம்முடைய ஆயிரம் ரூபாயையும், அந்தக் கள்ளப்பிள்ளைக்கும் அவருடைய பெண்சாதிக்கும் நஷ்ட ஈடாகக் கொடுக்கும்படி தீர்மானிக்கிறேன். யாரடா சேவகர்கள்! அவர்களை அழைத்து வாருங்கள்' என்று சொல்லி வாய் மூடுமுன் இன்னொரு அறையிலிருந்து வீரம்மாளும் அவளது புருஷனும் ஒடோடியும் வந்து திவானுக்கெதிரில் கீழே விழுந்து கரைபுரண்டெழுந்து மனவெழுச்சியும், பயபக்தி விசுவாசமும் தோன்ற, சாஷ்டாங்க மாக நமஸ்காரம் செய்து எழுந்தனர். அவர்களது மனத்தில் பொங்கியெழுந்த ஆநந்தமும் குது.ாகலமும் அவர்களை மெய்மறந்து போகும்படிச்செய்து பரவசப்படுத்தின. அவர்கள் கண்களிலிருந்து ஆநந்த நீர் மாலை மாலையாய்ப் பெருகி வழிந்தது. அவர்களது தேகம் புளகாங்கிதமடைந்து ஆநந்த மயமாக நிறைந்து இளகி இளகி உருகிப் பேரின்பத்தில் தோய்ந்து நின்றது. வீரம்மாள் முற்றிலும் தழுதழுத்த நயமான குரலில் பேசத்தொடங்கி, "சுவாமீ! எங்களுடைய தீராக் கலியைத் தீர்த்து வைத்த ஆண்டவனே! பரம தயாளுவே! காருண்ய வள்ளலே! தங்கள் மாளிகையில் கேவலம் வாசல் பெருக்கும் யோக்கியதை கூட இல்லாத என்னைத் தாங்களும் தங்கள் அருங்குண மனைவியாரும் தங்களுக்குச் சமமாக மோட்டார் வண்டியில் வைத்து அழைத்து வந்து, நாங்கள் ஏழேழு தலைமுறையில் தவம் செய்தாலும் நாங்கள் எதிர்பார்க்க இயலாத உபசரணைகளையும் சுகத்தையும் கொடுத்து, அணைந்துபோயிருந்த எங்கள் குல விளக்கையும் ஏற்றி வைத்த தங்களுக்கு நானும் என் புருஷனும் எங்கள் தேகத்தைச் செருப்பாய்த் தைத்துப் போட்டால் கூட அது