பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 செளந்தர கோகிலம் தாங்கள் கைம்மாறு கருதாமல் செய்த பேருதவிக்கு ஈடாகாது. தாங்களே திவான் என்பதை அறியாமல் நான் தங்களைக் குறித்து அவதூறான வார்த்தைளை உபயோகித்தது இப்போது என் மனசை ஆயிரம் வாள்கள் கொண்டு அறுப்பதுபோல வதைக்கிறது. இந்தக் கலிகாலத்தில் நாங்கள் தங்களையும் தங்கள் மனையாரையும் பேசும் தெய்வங்களாகக் கண்டோம். நெடுங்காலமாய்ப் புண்பட்டு மறுகிக் கிடந்த இந்த ஏழைகளின் மனம் குளிரும்படி செய்து எங்களை உய்வித்த பரம தயாளுவே! தாங்கள் தங்கள் சம்சாரம் குழந்தைகளோடு என்றென்றும் சிரஞ்சீவியாயிருந்து அமோகமாய் வாழவேண்டும். என் அப்பனே! தங்களுடைய பெயரும் புகழும் மலை மேல்வைத்த தீபம் போல எங்கும் தெரிந்து என்றென்றைக்கும் நீடித்து நிற்க வேண்டுமையனே' என்று கூறி ஆநந்தக் கண்ணிர் சொரிந்து மேன் மேலும் கீழே விழுந்து விழுந்து கும்பிட்டாள். கண்ணு சாமி என்ற பெயர்கொண்ட அவளது புருஷன் காட்டாற்று வெள்ளம் போலக் கட்டிலடங்காமல் பொங்கி எழுந்த தனது மனவெழுச்சியையும், ஆநந்தப் பெருக்கையும் தாங்க வல்லமை அற்றவனாய், தானும் மெய்ம்மறந்து கீழே வீழ்ந்து எழுந்து நின்று கன்னங்களில் அடித்துக்கொண்டு கைகுவித்து நின்றான். அந்த மகா பரிதாபகரமான காட்சியைக் கண்ட திவானும், நீதிபதி முதலிய மற்ற நால்வரும் இளகி உருகிப் பொங்கிப் பொருமினர். அவர்களது கண்களிலிருந்து கண்ணிர் தாரை தாரையாக வழிந்தது. உடனே திவான் அவர்களைப் பார்த்து, "அப்பா கண்ணுச்சாமீ. வீரம்மா! உங்களைப் பிடித்திருந்த சனியன் இன்றோடு தொலைந்தது. இந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் உங்களுக்கு இதுகாறும் செய்த கெடுதலுக்கு நஷ்ட ஈடாக இவரிடமுள்ள சொத்து முழுவதையும் கொடுத்து விடும்படி நான் உத்தரவு செய்திருக்கிறேன். ஆனால், நிரம்பவும் சொற்பத் தொகையான ஆயிரம் ரூபாய் தான் இவரிடம் இருக்கிறது. அதை மாத்திரம் உங்களுக்குக் கொடுப்பது போதாதென்பது என் அபிப்பிராயம். ஆகையால், என் சொந்த ஐவேஜியிலிருந்து இன்னம் இரண்டாயிரம் ரூபாய் உங்களுக்குக் கொடுக்கும்படி நான் என் சம்சாரத்தினிடம் சொல்லி இருக்கிறேன். நீங்கள் போய் அதையும் வாங்கிக்கொண்டு,