பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 143 ஆசைதீர உனக்குக் கிடைக்கிறதில்லையென்று நீ குறை பட்டுக் கொள்ளுகிறாயே! இருட்டறையில் எதையும் அறியாமல் கிடந்து தடவும் ஒரு குழந்தையைப் போலக் கடவுளின் இருப்பிடத்தையும், அவரை அடையும் வழியையும், இந்த சிருஷ்டியின் மர்மத்தையும் அறியாமல் கிடந்து உழலும் மகா அற்ப சக்தி வாய்ந்தவர்களான மனிதர்கள் கடவுளுக்குப் பணிவிடைகள் செய்வது எப்படி? அவரை சந்தோஷப்படுத்துவது எப்படி? அவருடைய அருளொளியை அடைவது எப்படி? இதை நினைக்க நினைக்க, மூளை தெறித்துப் போய்விடும்போல இருக்கிறது” என்று கூறுவதும், புதிய தபால் ஒன்றை எடுத்து தமது கவனத்தைச் செலுத்துவதுமாயிருந்தார். அடிக்கடி அவரது வாயில் பலகாரத்தைச் சிறுகச்சிறுகப் போட்டுக் கொண்டிருந்த காந்திமதியம்மாள் அவர் ஒரு கடிதத்தைப் படித்துக் கீழே வைத்துவிட்டு இன்னொன்றை எடுத்த காலத்தில் அவருடன் பேசத் தொடங்கி, 'மனிதருக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் இல்லையா? மனிதராகிய நாம் சொற்ப அறிவை உடையவர்கள். கடவுள் ஒரே அறிவுச் சுடராக இருப்பவர். அவரே எல்லா வற்றையும் படைத்துக் காத்து அழிப்பவர். எல்லா ஜெந்துக்களின் தேவைகளும், மனப்பான்மையும் கண்ணாடியில் தெரிவதுபோல அவருடைய சித்தத்திற்குத் தெரிந்துகொண்டே இருக்கும். மனிதருடைய விஷயம் வேறு மாதிரியானது. ஒரு சுவருக்கு மறைவில் என்ன நடக்கிறதென்பது நமக்குத் தெரிகிறதில்லை. மனிதர் ஒருவரோடொருவர் கூடவே இருந்து பழகினாலும், ஒருவர் மனசில் என்ன விஷயம் இருக்கிறதென்பது மற்ற வருக்குத் தெரிகிறதில்லை; எலும்பு தோல் முதலியவற்றாலான சுவர் அவற்றிற்குள் இருக்கும் மனசை மறைத்துவிடுகிறது. அதை அவரே வெளியில் காட்டிக் கொண்டாலன்றி மற்றவருக்கு அது தானாகவே தெரிகிறதில்லை. ஆகையால் மனிதருக்கு மனிதர் வெளிப்படையான செய்கையினால் தங்கள் மன நிலைமையைக் காட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதுவும் எங்களைப்போன்ற ஸ்திரீகள் புருஷருடைய பணிவிடைகளுக்கு என்றே ஜென்மம் எடுத்தவர்கள். ஆகையால், நாங்கள் மற்றவர் களைவிட அதிக ஜாக்கிரதையாகவும் விழிப்பாகவும் நடந்து கொள்ளவேண்டும். மாதுரியமான தின்பண்டங்களை மனிதர்