பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 செளந்தர கோகிலம் சாப்பிடும்போது அவர்களுக்கு அது எவ்வளவு இன்பகரமாய் இருக்குமோ, அதுபோல, ஸ்திரீகளுக்குத் தங்களுடைய புருஷருக்கும், புருஷரைச் சேர்ந்தவருக்கும், குழந்தைகளுக்கும் பணிவிடை செய்வது இன்பகரமாகத் தோன்றவேண்டும். அவ்விதமான மனப்போக்கை அவர்கள் ஆதியிலிருந்தே உண்டாக்கிக் கொள்ளவேண்டும். அதுதான் குடும்ப வாழ்க்கை யின் மர்மம்' என்று கூறிய வண்ணம் பலகாரத்தை வாயில் கொடுத்தாள். திவான் முதலியார், 'உலகத்திலுள்ள எல்லாப் பெண் பிள்ளைகளும் உன்னைப்போல இவ்விதமாகவே எண்ணு கிறார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. இருக்கட்டும்; வயிறு நிரம்பிப் போய்விட்டது. போதும்; தண்ணிர் கொடு” என்றார். அவ்வாறே பெண்மணி தண்ணிர்ப் பாத்திரத்தை எடுத்துக் கொடுக்க, திவான் அதை வாங்கிச் சிறிதளவு பருகிய பின் பாத்திரத்தை அவளிடம் கொடுக்க , அவள் அதை வாங்கி அப்பால் வைத்தபடி பேசத் தொடங்கி, 'பெரும்பாலோரான ஸ்திரீகள் தம்முடைய கடமைகளைச் சரியானபடி தெரிந்து கொண்டு ஒழுங்காய் நடந்து கொள்ளாதிருப்பதனால்தான் உலகத்தில் அநேக குடும்பங்களில் சண்டையும் பூசலும் மனஸ்தாபமும் அடியும் தடியுமாக இருக்கின்றன. இது எல்லோரும் அறிந்த விஷயந்தானே' என்றாள். அந்தச் சமயத்தில் திவான் படிக்க எடுத்த கடிதத்தின் மேல் விலாசத்தில் இருந்த எழுத்து அவரது கவனத்தைக் கவர்ந்து கொண்டது. அவர் தமது மனையாட்டியுடன் பேசுவதை விடுத்து அந்தக் கடிதத்தின் உறையை ஆவலோடு கிழித்த வண்ணம், 'இது அப்பாவின் எழுத்துபோலிருக்கிறது. இது அநேகமாய் அவர்களுடைய கடிதமாகத்தான் இருக்க வேண்டும்' என்று கூறியவண்ணம் உறைக்குள்ளிருந்த கடிதத்தை எடுத்தார். அவரது சொல்லைக் கேட்ட அந்த மாதரசியும் திடுக்கிட்டு ஆவலும் ஆசையும் தோன்ற, "ஆ, அப்பாவுடைய கடிதமா? படியுங்கள்” என்று கூறிவிட்டு நிரம்பவும் பணிவாக ஒரு பக்கத்தில் ஒதுங்கி நின்றாள். அந்தக் கடிதம் தனது மாமனாரால் எழுதப்பட்ட கடிதம் என்பதைக் கேட்டவுடன் அந்தப்