பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 189 இருக்கிறார்கள். அத்தி பூத்ததுபோல ஆயிரத்தில் ஒருவர் அந்தக் கோஷ்டியில் சேராதவர்களாக இருக்கிறார்கள். நல்ல வேளையாக, நீ இந்த விஷயத்தில் என்னுடைய மனப்போக்குக்கு ஒத்தபடி இருக்கிறாயே. இந்த விஷயத்தில் அதிர்ஷ்டவான்தான். இருக்கட்டும்; நேரமாகிறது, நீ இந்தப் பாத்திரங்களையெல்லம் எடுத்துக்கொண்டு உள்ளே போ. நான் பார்க்கவேண்டிய காகிதங்கள் ஏராளமாக இருக்கின்றன. பார்த்துவிட்டு, சரியான காலத்தில் நான் கச்சேரிக்குப் போகவேண்டும்” என்றார். அவர் கூறிய புகழ்ச்சியான மொழிகளைக் கேட்டு மிகுந்த பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைந்த பெண்மணி தான் கொணர்ந் திருந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு மறைந்து போய் விட்டாள். இந்த சம்பாஷணை நடந்த தினத்திற்கு மூன்றாவது நாள் காலையில் காந்திமதியம்மாள் தனது புதல்வனான ராஜாபகதூர் என்ற நற்குணச் சிறுவனோடு திருவடமருதூருக்குப் பிரயாண மானாள். திவான் முதலியாரது தந்தையான குஞ்சிபாத முதலியாரால் அனுப்பப்பட்டு வந்த இராமலிங்கம் என்ற பெயருடைய தவசிப் பிள்ளையும் இன்னொரு பணிமகனும், ஒரு பணிமகளும் துணையாகப் புறப்பட்டனர். திவான் முதலியார் உயர்தர ஆபரணங்களால் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டு போகும்படி தமது மனையாட்டிக்குக் கூறினார். ஆனாலும், கற்பின் பீடிகையாய் விளங்கிய அந்தப் பெண்மணி தான் வசீகரமாகத் தன்னை அலங்கரித்துக் கொள்வது கொண்ட கணவரது சந்தோஷத்திற்கே யாதலால், அவரில்லாத இடத்தில் தான் அவ்வாறு இருப்பது தகாத செய்கை யென்றும், அது ஏதேனும் எதிர்பாராத பெருத்த பொல்லாங்கை விளைவிக்குமென்று நிரம்பவும் பணிவாக அவருக்கு மறுமொழி கூறித் தான் சாதாரணமான ஏழை ஜனங்களுள் ஒருத்திபோலச் செல்ல அநுமதி கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டவளாய் அவ்வாறே தன்னை ஒர் ஏழை ஸ்திரீ போல அலங்கரித்துக் கொண்டாள். அந்தப் பெண்ணரசியின் தேகத்தில் அதுகாறும் இருந்து வந்த இருநூறு முன்னுாறு ரூபாய் விலைமதிப்புள்ள ஜரிகைப் புட்டாக்கள் நிறைந்த பட்டுச்