பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 செளந்தர கோகிலம் திருந்த தோப்புகளும் குன்றுகளுமே எங்கும் மயமாய் நிறைந்து தோன்றின. குளிர்ந்த மந்த மாருதம் நிரம்பவும் மனோக்கியமாக வீசிக்கொண்டிருந்தது. ஆகாயத்தில் வெகுதூரம் சென்றிருந்த மரக் கிளைகளின்மீது, கந்தருவ லோகத்திலிருந்து வந்திறங்கிய நடன மாதர்கள் போல, ஏராளமான மயில்கள் தமது தோகை களை விரித்து நேத்திராநந்தமாக நடந்து கொண்டிருந்தன. கோகிலங்கள் ஒவ்வொரு மரத்திலும் இலகrம் கோடிக் கணக்கில் நிறைந்து, கனிந்து மகா உருக்கமான தமது குரல்களைக் கிளப்பி மேல்பஞ்சம ஸ்தாயியில் முறை வைத்து கானம் செய்து கொண்டிருந்தன. அந்த மாலையின் மலைக்காட்சி ஒப்புயர்வற்ற பிரம்மாநந்தக் காட்சியாக அமைந்திருந்தது. நமது திவான் முதலியார் அத்தகைய காட்சியின் இடையில் தமது மனத்தை அவற்றில் செலுத்த முயன்ற வண்ணம் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஆனாலும், அப்போதே அவரது மனம் கட்டிலடங்காமல் ஒரே பிடிவாதமாக அவ்விடத்தை விட்டு வேறிடத்திற்குச் சென்றுகொண்டே இருந்தது. தமது மனையாட்டியும் புதல்வனும் இல்லாத எந்த இடமும் அவருக்கு உயிரற்றதாகவும், சுவாரஸ்ய மற்றதாகவும் தோன்றியதன்றி, அவரது மனம் ஒருநிலையில் நில்லாது சுழன்று கொண்டிருந்தமை யால், அவரைச் சுற்றிலும் இருந்த பொருள்கள் யாவும் சுழலுவது போலத் தோன்றின. “மண்சுழன்று, மால்வரை சுழன்றது, மதிஓர் எண்கழன்றது, சுழன்றதவ்வெறி கடல் எழும், விண்சுழன்றது, வேதமுஞ் சுழன்றது, விரிஞ்சன் கண்சுழன்றது, சுழன்றது கதிரொடு மதியும்.” என்ற நமது தெய்விகப் புலவரது அற்புதமான வர்ணனை நமது திவான் முதலியாரது அப்போதைய நிலைமைக்கு அநேகமாய்ப் பொருத்தமானதாக இருந்தது. அவ்வாறு அவர் சிறிது நேரம் உலாவி அரும்பாடுபட்டுத் தமது மனத்தை அங்கிருந்த பொருட்களின் மீது திருப்ப முயன்றுகொண்டே செல்ல, பிரம்மாண்டமாக வளர்ந்து நீண்டிருந்த அழகிய தனது தோகையை விரித்து ஆநந்த நடனம் புரிந்துகொண்டிருந்த தோகை மயில் ஒன்று தற்செயலாக அவரது திருஷ்டியில் படவே, அவர் அதைப் பார்த்து, "ஆகா ஐயோ! இதன் சாயல் தத்ரூபம்