பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 179 காந்திமதியின் சாயலைப் போலல்லவா இருக்கிறது! தன்னுடைய வடிவம் முழுதையும் தன்னோடு கொண்டுபோய் விட்ட என் தாந்திமதி தன்னுடைய சாயலை மாத்திரம் எனக்குக் காட்டும் படி உன்னிடம் கொடுத்துவிட்டுப் போனாளா? ஆகா!' என்று நினைத்து நெக்கு நெக்குருகி நின்ற காட்சி, 'ஒடாநின்ற களிமயிலே! சாயற்கொதுங்கி உள்ளழிந்த கூடாதாரில் திரிகின்ற நீயும் ஆகங்குளிர்ந்தாயோ? சேடாநின்ற என் உயிரைத் தெரியக்கண்டாய், சிந்தைஉவந்து ஆடாநின்றாய்; ஆயிரம் கண்ணுடையாய்க் கொளிக்குமாறுண்டோ? என்று அந்த ஏந்தொழில் தோகை மயூரத்தை நோக்கி அவர் கேட்டதுபோல இருந்தது. அதற்குமுன் அவர் காந்திமதி யம்மாளுடன் அவ்வாறு வெளியூர்களில் முகாம் செய்திருந்த காலங்களில், அத்தகைய இயற்கை அழகுகளைக் காண்பது அவர்களுக்குத் தெவிட்டாத இன்பமாகவும் எல்லையற்ற ஆநந்தமாகவும் இருந்ததற்கு முற்றிலும் மாறாக திவானுக்குத் தமது பிரிவாற்றாமைத் துன்பத்தின் பெருக்கில், சிருஷ்டிப் பொருள்கள் யாவும் பெருத்த துன்பம் விளைவிப்பனவாய்த் தோன்றின. ஆகவே, அவர் கூடாரத்தில் இருந்ததைவிட வெளியில் போய் உலாவித் திரும்பியதில் அவரது மனம் அதிக சோர்வையும் ஏக்கத்தையும் வேதனையையும் அடைந்தது. அவ்வித நிலைமையில் அவர் திரும்பித் தமது கூடாரத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்கு அன்றைய இராப் போஜனம் இராத போஜனமாகவே முடிந்தது. படுக்கையும் முள் படுக்கையாகவே இருந்தது. அவர் மறுநாட் காலையில் தமது சயனத்தை விடுத்தெழுந்த காலத்தில் முற்றிலும் சோர்ந்து தளர்ந்து வெளுத்து விகாரத் தோற்றம் அடைந்திருந்தார். அவரது துயரத்தையும் மாறுபாட்டையும் கண்ட சிப்பந்திகள் அனைவரும் அவரது தேகஸ்திதியைக் குறித்து மிகவும் கவலையும் கலக்கமும் கொண்டு அவரைப் பலவாறு ஊக்கி சந்தோஷப்படுத்த முயன்றதன்றி, அவர் தமது போஜனம் தூக்கம் முதலியவற்றை அலட்சியம் செய்யாது தமது தேகத்தைத் தக்கபடி போஷிக்காவிடில் வெகு சீக்கிரத்தில் அவர் நோய்வாய்ப்பட