பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 செளந்தர கோகிலம் நற்சாக்ஷிப் பத்திரம் ஏதேனும் ஒன்றை அனுப்பவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதைப்பற்றி அவன் தனது தந்தையிடம் தெரிவிக்க, அவர் சிறிதுநேரம் யோசனை செய்து, அடேய் அண்ணாசாமி! நம்முடைய குஞ்சிபாத முதலியார் இருக்கிறாரே அவருடைய பிள்ளை திருவனந்தபுரம் திவானாக இருக்கிறார். நீ உடனே போய்க் குஞ்சிபாத முதலியாரைக் கண்டு. அவருடைய பிள்ளையிடத்திலிருந்து ஒரு நற்சாகதிப் பத்திரம் வருவித்துக் கொடுக்கும்படி கெஞ்சிக் கேட்டுப்பார்?' என்றார். அண்ணாசாமி அப்படியே போய்க் கேட்க, குஞ்சிபாத முதலியார் தமது புத்திரன் தனக்கு நேரில் அறிமுகமில்லாத மனிதனுக்கு நற்சாகூவிப் பத்திரம் கொடுக்கமாட்டானென்று கண்டித்துக் கூறியனுப்பிவிட்டார். அந்த விசனகரமான செய்தியைக் கேட்டு மனமுறிவடைந்துபோன அண்ணாசாமி அவ்விடத்தைவிட்டு வெளியில் வந்தான். வரும்போது, கிழவரால் படித்துவிட்டு மறதியாய் நடைச்சுவரின் மாடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தை நமது அண்ணாசாமி கண்டு அதை எடுத்துப்பார்த்தான். அது திருவனந்தபுரத்திலிருந்த நமது திவான் முதலியார் தமது தந்தைக்கு எழுதிய ஒரு கடிதமாக இருந்தது. அதன் முடிவில் திவானினது கையெழுத்து தெளிவாகப் போடப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் பையனது மனதில் ஒரு யுக்தி தோன்றியது. அவன் உடனே அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து நமது திவானுடைய கையெழுத்தைப் போலப் பல தடவை எழுதி எழுதிப் பழக, சிறிது நேரத்திற்குப் பிறகு, அவனால் எழுதப்பட்ட கையெழுத்து தத்ரூபம் நமது திவான் முதலியாரது கையெழுத்தைப் போலவே காணப்பட்டது. அவர் தனக்கு டைப் அடித்து எழுதிக்கொடுத்தது போல அவன் உடனே ஒரு நற்சாகதிப் பத்திரம் தயாரித்து, அதன் அடியில் அவர் செய்தது போலக் கையெழுத்துச்செய்து அதைத் தனது மனுவோடு சேர்த்து மஞ்சட்குப்பம் கலெக்டர் துரைக்கு அனுப்பிவிட்டான். அந்த மனு கலெக்டர் கச்சேரிக்குப் போய்ச் சேர்ந்த காலத்தில் அந்த ஜில்லாவின் கலெக்டர் வேலை பார்த்த துரை அதற்குச் சில வருஷங்களுக்கு முன் சென்னை கவர்னர்