பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதார் 195 பலகாரம் சாப்பிடவும் செய்திருக்கவேண்டும். அது மட்டுமா! நான் ஒளித்து வைத்திருந்த பாஷாணங் கலக்கப்பட்டிருந்த வடைகளைக் கந்தன் மற்ற வடைகள் இருந்த பாத்திரத்தில் போட்டுவிட்டான் போலிருக்கிறது. நான் தபாலாபிசிலிருந்து வந்தவுடன் எனக்குப் பசியாயிருந்தது. ஆகையால், நான் ஐந்தாறு வடைகளை எடுத்துத் தின்றுவிட்டேன். மேலே கிடந்த விஷங் கலந்த வடைகளெல்லாம் என் வயிற்றுக்குள்ளேயே போய் விட்டன. விஷம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. குடல்களெல்லாம் இன்னம் கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்துவிடும் போலிருக்கின்றன. என் உடம்பு நிலை கொள்ள வில்லை. என் பிராணன் துடிக்கிறது. நான் உயிர்க்கழுவில் நிற்பதுபோல வதை படுகிறேன். இனி என் பிராணன் அதிக நேரம் நிற்காது. தாங்கள் அவசரமாய் எனக்கு ஏதாவது தண்டனை விதிக்காவிட்டால், என் மனசுக்கு ஒரு நிம்மதி ஏற்படாது. உடனே தயவு செய்யுங்கள்' என்று நிரம்பவும் உருக்கமாகக் கதறிப் பதறிக் கூறினான். அந்த வரலாற்றைக் கேட்ட திவான் முற்றிலும் திக்பிரமை கொண்டு நடுநடுங்கிப் பதறிப்போனார். தாம் என்ன செய்வது என்ன சொல்வது என்பதை அறியாது இரண்டொரு நிமிஷகாலம் தத்தளித்தபின் திவான் அவனைப் பார்த்து, 'அப்பா முத்துசாமி! உனக்கு என்மேல் அவ்வளவு மன வருத்தமும், என்னைக் கொன்றுவிட வேண்டுமென்ற மன உறுதியும் ஏற்படும்படி நான் உனக்கு என்ன தவறு செய்தேனப்பா? சொல்வாயானால், அதற்கு நான் உடனே பரிகாரம் செய்து உன் மனக் குரோதம் தீரும்படி நடந்து கொள்ளுகிறேன்” என்று கூறிவிட்டு விரைவாக எழுந்து அப்பால் போய் ஒரு சேவகனை அழைத்து, சமஸ்தான ஆயுர்வேத வைத்தியர் இருக்கிறாரா என்று கேட்க, அவன், 'அவர் வெளியில் ஏதோ காரியமாய்ப் போனார் என்றான். உடனே திவான், 'உடனே ஒடி அவரை அவசரமாய் அழைத்துக் கொண்டு வா’ என்று கூறிவிட்டு, மறுபடி உள்ளே வந்து முத்துசாமியைப் பார்த்து, அன்பு ததும்பிய குரலில் பேசத் தொடங்கி, 'முத்துசாமி! நிஜத்தைச் சொல். நான் உனக்குக் கெடுதல் செய்வேனென்று பயப்படாதே’ என்று அவனுக்குத் தைரியமுண்டாகும் விதமாய்ப் பேசினார். அதைக் கேட்ட