பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிவான் சாகேப், காங்கிமகி யம்மாள். ராமா பககார் 199 பொய்யாகவோ சொல்லுகிறாயா?” என்றார். அவ்வாறு அவர் கேட்கும் போதே அவரது மூளை முற்றிலும் கலங்கிச் சுழலத் தொடங்கியது. அவரது மனத்தில் பிரளயகாலச் சண்டமாருதம் போலக் குபிரென்று பொங்கியெழுந்த உணர்ச்சிகளை அவர் தாங்கமாட்டாதவராய் அப்படியே நாற்காலியில் சாய்ந்தார். உடனே முத்துசாமி, "ஆண்டவனே! நான் தெய்வ சன்னிதானத்தில் நின்று சொல்லுவதுபோலச் சொல்லுகிறேன். அம்மாள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ இல்லையோ என்பதை நான் நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. அந்த ஆள் சொன்னதை நான் அப்படியே தெரிவித்துவிடேன். பொய் சொன்னால் நான் நரகத்துக்கே போவேன்' என்றான். அவனது முடிவான சொல்லைக் கேட்ட திவான் மின்சார சக்தியால் திடீரென்று தாக்கப்பட்டவர்போலத் தமது உணர்ச்சியை இழந்து அப்படியே முன்பக்கத்தில் மேஜையின் மேல் குப்புறச் சாய்ந்து பிணம்போலாய் விட்டார். o