பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 செளந்தர கோகிலம் வாயை வைத்து மெதுவாய், "ஏனம்மா கூப்பிடுகிறாய்? என்ன விசேஷம்? என்றான். - உடனே கோகிலாம்பாள் பதை பதைப்பாகவும் அவசரமாகவும் பேசத் தொடங்கி, "அப்பா கோவிந்தசாமி! இன்ஸ்பெக்டருக்கு இப்போது டெலிபோனில் சங்கதி வந்தது. ஏதோ தலைபோகிற காரியமாம். போலீஸ் கமிஷனர் இவரையும்கூட அழைத்துக்கொண்டு உடனே எங்கேயோ போகவேண்டுமாம். அதற்காக அவர் தம்முடைய ஆபீசை விட்டுப் புறப்பட்டு மோட்டார் வண்டியில் இங்கே வந்து கொண்டிருக்கிறாராம். யாரோ ஒரு குமாஸ்தா இன்ஸ் பெக்டரைக் கூப்பிட்டு இந்தச் சங்கதியைச் சொன்னார். அநேகமாய் இன்னும் கால் நாழிகையில் போலீஸ் கமிஷனர் இங்கே வந்துவிடுவாராம். வந்தால் வெளியில் இருக்கும் ஜெவான்கள் பயந்து அவரை உள்ளே விட்டாலும் விட்டு விடுவார்களாம். இன்ஸ்பெக்டரும் நீயும் வீட்டில் இல்லை என்றும், எங்கேயோ போயிருப்பதாகவும் போலீஸ் கமிஷனருக்குத் தகவல் கொடுத்து அவரை அனுப்பிவிட வேண்டுமாம். கதவைத் திற” என்று நிரம்பவும் படபடப்பாகவும் அவசரத்தைக் காட்டியும் கூறினாள். கோவிந்தசாமி அந்த வரலாற்றை உண்மையென்று நம்பி உடனே தாழ்ப்பாளை விலக்கிக் கதவைத் திறந்துவிட பெண்ணரசி சரேலென்று வெளியில் வந்து நிரம்பவும் ரகளிலியமாய் அவனுடன் பேசத் தொடங்கி, “போலீஸ் கமிஷனர் வந்துவிட்டு போகிறவரையில் ஐயா உள்ளேயே இருக்கப்போகிறாராம். இந்தக் கதவைத் தாளிட்டு வெளியில் பூட்டிக்கொண்டு நீ எங்கேயாவது போய்க் கொஞ்சநேரம் ஒளிந்திருந்துவிட்டு வரும்படி ஐயா உன்னிடம் சொல்லச்சொன்னார். நான் உடனே கீழே போய் அங்கே இருக்கும் பாராக்காரர்களை எச்சரித்துவிட்டு, எங்கேயாவது மறைந்துகொள்ளுகிறேன்' என்று கூறியபடி மெத்தைப்படியை நோக்கி விசையாக நடக்கலானாள். அவள் கூறியது முழுதும் மெய்போலவே இருந்தது. ஆகையால், கோவிந்தசாமி உடனே கதவைச் சாத்தி வெளியில் தாளிட்டுக்கொண்டு, பூட்டை எடுத்து வருவதற்காக முயன்றவன், 'அம்மா! கீழே போக உங்களுக்கு வழி தெரியுமா? நானும் வரவேண்டுமா?” என்றான்.