பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 219 உடனே கோகிலாம்பாள், "எனக்கு வழி நன்றாக ஞாபகம் இருக்கிறது. நீ முதலில் பூட்டை எடுத்து வந்து இந்தக் கதவைப் பூட்டு' என்று மறுமொழி கூறியபடி மெத்தைப் படிகளின் வழியாய்த் தடதடவென்று கீழே இறங்கி அவனது திருஷ்டியில் படாமல் மறைந்துபோய்விட்டாள். உடனே கோவிந்தசாமியும் பூட்டிருந்த இடத்தை நோக்கி ஓடிவிட்டான். கோகிலாம்பாள் தலைகால் தெரியாமல் ஒரு தாவில் இரண்டு மூன்று படிகள் வீதம் பாய்ந்து இரண்டே நிமிஷத்தில் கீழே இறங்கி விட்டாள். இன்ஸ்பெக்டர் ஒருகால் கூச்சலிட்டு கோவிந்தசாமியை அழைத்து உண்மையை வெளியிட்டு உடனே கதவைத் திறக்கச் செய்கிறாரோவென்ற நினைவும், அவர்கள் தன்னைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு ஓடிவருகிறார்களோ என்ற கிலியும் நடுக்கமும் அவளை ஒரே தள்ளாகத் தள்ளிக் கொண்டு வந்தமையால், அந்த இரண்டு நிமிஷமும் அவளது மனம் விவரிக்க இயலாத நரகவேதனையை அடைந்ததென்றே கூறவேண்டும். அவ்வாறு ஒரே ஒட்டமாக ஒடிக் கீழே இறங்கிய பெண்மணி அந்த மாளிகையின் முன் வாசலை அடைந்தாள். அவள் கோவிந்தசாமியோடு வந்த காலத்தில் நின்ற இரண்டு ஜெவான்களும் முன் போலவே அவ்விடத்தில் இருந்தனர். தான் உள்ளே இருந்து தப்பி ஓடிவந்து விட்டதைக் குறித்து அவர்கள் சிறிதும் சந்தேகம் கொள்ளாதபடி நமது கோகிலாம்பாள் அவர்களண்டை சென்று, "போலீஸ் கமிஷனர் அவருடைய கச்சேரியிலிருந்து மோட்டார் வண்டியில் ஏறிக்கொண்டு ஒர் அவசர காரியமாய் இங்கே வருவதாக டெலிபோனில் செய்தி வந்தது. அவர் வரும்போது நான் உள்ளே இருப்பது சரியல்லவாம்! அதற்காக என்னை வெளியில் அனுப்பிவிட்டார்கள் போலீஸ் கமிஷனர் இங்கே வந்து கேட்டால், இன்ஸ்பெக்டர் வீட்டில் இல்லையென்று சொல்லிவிடுங்கள்” என்று கூறியவண்ணம், தனது பார்வையை நாற்புறங்களிலும் செலுத்தித் தங்களது பெட்டிவண்டி எங்கே யாகிலும் இருந்ததோவென்று ஆராய்ச்சி செய்தாள். சிறிது தூரத்திற்கு அப்பால் பெட்டிவண்டி விடப்பட்டிருந்ததன்றி, குதிரையும் தனியாகக் கட்டப் பட்டிருந்தது. வண்டியின் பின் பக்கத்துப் பலகையின்மேல்