பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 செளந்தர கோகிலம் னாரிடத்தில் சொல்லி அவரை நிரம்பவும் அவமானப்படுத்தி விட்டார்கள். நீ கேட்டுக்கொண்டதற்கு இணங்கி உன்னை வந்து பார்ப்பதாகச் சொல்லி இருந்த என்னுடைய தமயனார், அந்தக் கற்பகவல்லியை அவர்கள் இங்கே வைத்திருக்கிற வரையில், அவர் உன்னைக் கட்டிக்கொள்ள முடியாது என்றும் என்னிடத் தில் சொல்லிவிட்டு எங்களுடைய பங்களாவுக்குப் போய் விட்டார் ஊரிலுள்ள ஜனங்கள் எல்லோரும் துாஷிக்கிறபோது அவர்களை மீறி நாங்கள் இந்தக் காரியத்தை எப்படிச் செய்கிறது? எங்களுக்கு ஏராளமான சொந்தக்காரர்களும் சிநேகிதர்களும், குடியானவர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு எப்போதும் நாலு மனுஷர்கள் வேண்டும். ஊர் ஜனங்களின் பகைமையைச் சம்பாதித்துக் கொள்ள முடியவில்லை. ஆகையால், நான் போய்விட்டு வருகிறேன். இவர்கள் இந்தக் கற்பகவல்லியின் சம் பந்தத்தை அறவே ஒழித்துவிடுவார்களானால், அதன் பிற்பாடு வேண்டுமானால், நாங்கள் உன்னைக் கட்டிக்கொள்ளுகிறோம்" என்று விசனமாகவும் இரக்கமாகவும் கூறினாள். அவளது வார்த்தைகளைக் கேட்ட செளந்தரவல்லியின் முகம் சடக்கென்று மாறுபட்டது. பெருத்த விசனமும், கோபமும், அழுகையும் பொங்கி எழுந்தன. தனது அக்காளும், தாயும் செய்யும் காரியத்தி னால், தான் ஆசைப்பட்ட புருஷனைத் தான் இழந்து விடுகிறதா என்ற ஆத்திரமும் உக்கிரமும் அவளது மனதில் கொந்தளித்து எழுந்தன. அவள் உடனே புஷ்பாவதியை நோக்கி, 'அம்மா! நீ சொல்வதெல்லாம் சரியான சங்கதிதான். இப்படிப்பட்ட ஜாதி கெட்ட துருக்கச்சியை இவர்கள் இந்த வீட்டில் வைத்திருந்தால், யார் தான் இவர்களுடைய வீட்டுக்குள் நுழைவார்கள். இருக் கட்டும், நீ கவலைப்பட வேண்டாம். பொழுது விடிவதற்குள் இந்தக் கற்பகவல்லியம்மாள் இந்தப் பங்களாவை விட்டு ஒடிப் போகும்படி நான் செய்கிறேன். அப்படி நான் செய்தால், உன்னுடைய தமயனாரை நாளைக்காகவது நான் பார்க்க முடியும்படி நீ செய்வாயா?" என்றாள். புஷ்பாவதி, அம்மா! நீ ஏதாவது ஒன்று செய்யப்போக, நாங்கள்தான் உன்னைத் தூண்டிவிட்டோம் என்ற பழி எங்க ளுக்கு வந்து சேரும். நீ எதைச் செய்வதானாலும், நன்றாக யோசித்து எங்களுக்கு அபவாதம் உண்டாகாதபடி செய்; கற்பக