பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 221 ஆசனத்தில் ஏறி உட்கார்ந்து குதிரையின் கடிவாள வாரையும் சவுக்கையும் தனது கைகளில் பிடித்துக்கொண்டு குதிரையை விசையாக ஊக்க, அது உடனே ஒட ஆரம்பித்தது. அதை உணரவே, கோகிலாம்பாளுக்கு அப்போதே உயிர் திரும்பத் தொடங்கியது. அதுவரையில் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்த அந்த மடந்தையின் கைகால்கள் முதலிய அங்கங்களெல்லாம் அப்போதே ஒருவாறு அமைதியடைய ஆரம்பித்தன. பெருத்த கிலியினாலும், ஆத்திரத்தினாலும், கவலையினாலும், அவமானத்தினாலும் பதறிக் கொந்தளித்துத் தவித்துக் கொண்டிருந்த அவளது மனம் சிறிதளவு அவளது கட்டிலடங்கி வரத் தொடங்கியது. கால் நாழிகை காலத்தில் வண்டி இரண்டு மூன்று தெருக்களின் முடக்குகளில் திரும்பிப் போனதை உணர்ந்த கோகிலாம்பாள் அதற்குமேல் தனக்கு எவ்வித அபாயமும் நேராதென்றும், அந்தப் போலீஸ் அதிகாரி அதற்குமேல் தன்னை உபத்திரவிக்க முடியாதென்றும் நினைத்துத் தன் மனத்தை நிரம்பவும் தேற்றித் துணிவடைந்தவளாய், ஜன்னல்களின் கதவிடுக்குகளால் வண்டியின் மூன்று பக்கங்களிலும் தனது பார்வையைச் செலுத்தி வண்டிக்கருகில் யாரும் வரவில்லை யென்பதைக் கண்டு உடனே மினியனை நோக்கி, "அடே மினியா முருகேசனைப் போலீஸ் அழைத்துக் கொண்டு போனானே அவன் பங்களாவுக்கு வந்து சேர்ந்தானா? நீ இங்கே எப்படி வந்தாய்?" என்று வினவினாள். அதைக் கேட்ட மினியன், 'சாமி! நானு சொந்த அலுவலா ஆனைகவுணியண்டெ வந்தேனுங்க. நம்ப முருகேஸனைத் தானாக்காரன் இட்டுக்கினு போனதை நானு தூரத்திலே இருந்து பாத்தேனுங்க. வண்டியெ அப்பாலெ இப்பாலெ நவத்தி ஒட்டி இருப்பான், அதுக்காவதானாக்காரன் புடிச்சிக்கினு போறான்னு நெனெச்சிக்னேன். உள்ளற எஜமான் இருந்தத்தெப் பாத்தேன். வண்டியை ஒட்ட யாரும் காசாரி இல்லியேன்னு நெனெச்சு நானு நம்ப வண்டிக்கிப் பின்னாலெயே ஒடியாந்தேனுங்க. எப்படி ஒடியாந்தும் வண்டியெப் புடிக்க முடியல்வீங்க. கடெசியா எஜமான் ஒரு ஊட்டண்டெ வண்டியை நிறுத்தி, எறங்கி உள்ளற போனத்தை நான் தெருக்கோடியெ இருந்து பார்த்தேனுங்க, அந்த அடையாளத்தைப் புடிச்சிக்கினு