பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலககுகைககுட புகுந்த பூம்பாவை 223 இருந்தாலும பரவாயிலலிங்க. நாம் படியப் பூட்லாமுங்க. முருகேஸனை இதுக்குள்ளற தானாவுலே என்னா பண்ணிப்புடப் போறாங்க. அதெல்லாம் கெடுதல் எதுவும் நடக்காதுங்க, நானு சன நேரத்துலே போயி அவனெ இட்டாறேனுங்க. எசமானுக்கு அந்த கவலெ வாணாங்க” என்று கூறிய வண்ணம் குதிரையை நன்றாக அதட்டி ஒட்ட ஆரம்பித்தான். அவன் கூறிய சொற்களைக் கேட்ட பெண்மணி வண்டி சிக்கிரம் பங்களாவையடைந்து விடுமென்றும், உடனே மினியன் போய் முருகேசனை அழைத்துக்கொண்டு வந்து விடுவான் என்றும் நினைத்துத் தன் மனத்தை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டாள். முருகேசனைப் பற்றி அவளது மனத்தை வதைத்துக் கொண்டிருந்த கவலை உடனே விலகியது. விலகவே, அந்த மடந்தையின் மனம் தனது நிலைமைப்பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து போயிற்று. தனது ஆருயிர் மணாளனான கண்ணபிரான் அப்போது எவ்விடத்தில் என்ன நிலைமையில் இருக்கிறானோவென்றும், அவனைத் தான் காண இயலாமல் போய்விட்டதே என்றும், தான் புறப்பட்டுவர வேண்டுமென்று அவன் கடிதம் எழுதியனுப்பியதன் கருத்து எதுவாக இருக்கும் என்றும் அந்தப் பெண்மணி பலவாறு எண்ணத் தொடங்கினாள். போலீசார் கண்ணபிரானை எவ்வளவுதான் வஞ்சித்திருந்தாலும், அல்லது, வதைத்திருந்தாலும், அவர்களது கேவலமான துர் எண்ணத்திற்கு அவன் இணங்கி இருப்பானா என்ற சந்தேகமே அடிக்கடி தோன்றி அவளது மனத்தைக் கப்பிக்கொண்டு புண்படுத்தலாயிற்று. தான் அவனுடன் நெருங்கிப் பழகிய சொற்ப காலப் பழக்கத்திலிருந்து, அவன் மானமும், ஆண்மையும், வீரத் தன்மையும் பூர்த்தியாக வாய்ந்தவனென்ற அபிப்பிராயமே அவளது மனத்தில் பதிந்து போயிருந்தது. ஆகையால், அவன் தனது உயிரே போய்விடுவதானாலும் போலீசாரது கபடக் கருத்திற்கு இணங்கி இருக்கமாட்டான் என்றும், அவர்கள் ஏதோ தந்திரம் செய்து அவ்வாறு கடிதம் எழுதி வாங்கி அனுப்பியிருக்க வேண்டுமென்றும் நமது பெண்ணரசியான கோகிலாம்பாள் தனக்குத் தானே நிச்சயித்துக் கொண்டாள். அதுவுமன்றி, தன்னை அவ்வாறு வஞ்சித்து அழைத்துவர ஏற்பாடு செய்திருந்த மனிதர் கண்ணபிரான் அடை