பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 269 போனால் நீங்கள் சுவாமி தரிசனம் செய்துகொள்ளலாம்' என்றனர். உடனே திவான் சாமியார் அந்த ஊர் எந்தத் திக்கில் இருக்கிறதென்று அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவ்விடத்தை நோக்கிச் செல்லலானார். தாம் உலகைத் துறந்த சந்தியாசி என்று தாம் வெளியிட்டவுடனே தமக்கு ஏற்பட்ட மதிப்பையும் மரியாதையையும் உணர்ந்த திவான் தமக்குத் தாமே பலவாறு எண்ணமிடலானார்; "ஆகா! என்ன மனிதர் களுடைய மனப்போக்கு! உலகத்தில் ஏராளமான செல்வம் படைத்த பிரபுக்களாயிருந்தால், ஜனங்கள் அவர்களைத்தான் தெய்வம்போல மதித்துக் கொண்டாடுகிறார்களென்றால், உண்மையிலேயே உலகத்தைத் துறந்த பரதேசிகளைக் கண்டால், அவர்களையும் ஜனங்கள் அபாரமாகப் பெருமைப் படுத்து கிறார்களே! இந்த விநோதமான முரண்பாட்டை என்னவென்று சொல்லுகிறது! நேற்று நான் சாமியார் வேஷம் போட்டு ஜனங்களை முதன் முதலில் வஞ்சிக்க எத்தனித்தது எவ்வளவு சுலபத்தில் பலித்தது! என் சொல்லை அந்த ஊர் ஜனங்களும் கிராம முனிசிப்பும் வேதவாக்கியமாக அல்லவா மதித்து அப்படியே உண்மையாக ஏற்றுக்கொண்டார்கள்! இதுவரையில் என் ஆயுசு காலத்தில் எந்த விஷயத்திலும் பொய்யையே பேசியறியாத நான் நேற்று எப்பேர்ப்பட்ட பெருத்த புளுகைச் சொல்லி உண்மைபோல நடிக்க நேர்ந்தது! சே! நான் காஷாயம் ருத்திராக்ஷம் முதலியவைகளைத் தரித்துக் கொண்டவுடன் இப்பேர்ப்பட்ட படுமோசத்தில் தானா இறங்க வேண்டும். ஆகா! காலக் கொடுமையை என்னவென்று சொல்லுகிறது! யாரோ ஒருவர் எனக்குச் செய்ய நினைத்த தீங்கு எவ்வெவ்விதமாக மாறி என்னை எப்படிப்பட்ட கோலத்திற்கும் செய்கைக்கும் தூண்டி விட்டது! நான் உண்மையைக் கண்டு பிடிக்கிறவரையில் இன்னும் என்னென்ன தந்திரங்களை உபயோகிக்க வேண்டுமோ, எவ்வெவ்விதமாய்ப் புழுகவேண்டுமோ தெரியவில்லையே! காரியம் இவ்வளவு தூரத்திற்கு வந்த பிறகு நான் இனி பின் வாங்குவதும் யுக்தமானதல்ல; எனக்கும் என்னைச் சேர்ந்த மனிதர்களுக்கும் இது பொல்லாத வேளையென்பது பரிஷ்கார மாகத் தெரிகிறது. இந்தத் துன்பமெல்லாம் எவ்வளவு காலம் நீடித்திருக்குமோ தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் நான்