பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 செளந்தர கோகிலம் அந்த அம்மாளினது முகம் அப்போதும் ஒருவிதமான குழப்பத்தையும் கவலையையும் காட்டியதை நிரம்பவும் சூட்சுமத்தில் யூகித்தறிந்துகொண்ட புஷ்பாவதியம்மாள், "ஏனம்மா உங்கள் முகம் ஒருமாதிரியாக இருக்கிறது? ஏதாவது விஷேசம் உண்டா?” என்றாள். பூஞ்சோலையம்மாள், "வேறொன்றுமில்லை நாம் வீட்டிலிருந்தாலும் வெளியில் போனாலும், நாம் குற்றம் செய்தாலும் செய்யாவிட்டாலும், போலீசார் நம்மை மறக்காமல் நமக்கு விசேஷமான மரியாதை காட்டி வருகிறார்கள். அன்றைய தினம் நிச்சயதார்த்த காலத்தில் அவர்கள் நம்மை விட்டுவிடு வார்களென்று நான் நினைத்தேன். இப்போது நம்முடைய கோகிலாம்பாள் பெட்டி வண்டியில் உட்கார்ந்து போன பொழுது ஆணைகவுனியண்டை போலீஸ் ஜெவான் ஒருத்தன் வண்டியை மடக்கி அது தப்பான வழியில் வந்ததென்று சொல்வி வண்டியைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோக எத்தனித்தானாம். இவர்கள் அவசரமாய்ப் போகவேண்டுமென்று சொன்னதன்மேல் போலீசார் வண்டியோடு கோகிலாம்பாளை அனுப்பிவிட்டு, வண்டிக்காரனை ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போய் அவ்விடத்தில் அவனிடம் ஜாமீன் வாங்கிக் கொண்டு விட்டார்களாம். அவன் வந்து அந்தச் சங்கதியைத்தான் சொன்னான்' என்று நிரம்பவும் துன்பகரமான குரலில் கூறினாள். உடனே புஷ்பாவதி, "நிரம்ப நன்றாயிருக்கிறது சங்கதி. எல்லாம் வேளைப்பிசகு. நாம் யாரையும் நோவதற்கில்லை. வண்டிக்காரன் இங்கே வந்து விட்டானே. கோகிலாம்பாளுடன் யார் போனது?" என்றாள். பூஞ்சோலையம்மாள், 'வண்டிக்காரனோடு இன்னோர் ஆளும் இருந்தான். அவன் வண்டியை ஒட்டிக்கொண்டு போனானாம் என்றாள். புஷ்பாவதி, "கோகிலாம்பாள் இன்று சாயங்காலத்திற்குள் திரும்பி வந்துவிடுமா?" என்றாள்.