பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ! 53 பூஞ்சோலையம்மாள், 'இல்லை இல்லை. இன்னம் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வந்துவிடுவாள்' என்றாள். அவ்வாறு அவர்களிருவரும் சம்பாவித்தபடியே இரண்டு மூன்று நாழிகை காலம் இருக்க, வேலைக்காரியொருத்தி தோன்றி போஜனம் தயாராகிவிட்டது என்றும், அவர்கள் ஸ்நானத்திற்கு வரலாம் என்றும் கூறினாள். பூஞ்சோலையம்மாள் இன்னதென்று அறிய இயலாத ஒருவித வேதனையடைந்தவளாய் இருந்தமையால் அவளுக்கு போஜனத்தில் விருப்பம் செல்லவில்லை. ஆயினும் தன் வீட்டிற்கு விருந்தாளிகளாக வந்திருந்த புஷ்பாவதியம்மாளைத் தான் தக்கபடி உபசரித்து காலத்தில் உண்பிக்கவேண்டுமென்ற எண்ணங் கொண்டு அந்த அம்மாள் புஷ்பாவதியை அழைத்துக்கொண்டு செல்ல, இருவரும் தங்களது ஸ்நானம், போஜனம் முதலிய வற்றை முடித்துக்கொண்டனர். செளந்தரவல்லியம்மாள் அதற்கு முன்னரே தனது காரியத்தை முடித்துக்கொண்டு போய்ப் படுத்துத் துங்குகிறாளென்று வேலைக்காரிகள் தெரிவித்தனர். ஆதலால், பூஞ்சோலையம்மாளும், புஷ்பாவதியும் அவளின்றியே தமது காரியத்தை நிறைவேற்றிக்கொண்டு, பூஞ்சோலை யம்மாளின் விடுதிக்குப் போய்ச்சேர்ந்தனர். பகல் பன்னிரண்டு மணியாயிற்று. அப்பொழுதும் கோகிலாம்பாள் வரவில்லை. ஒருமணி, இரண்டுமணி, மூன்று மணியும் ஆயிற்று. புஷ்பாவதி பூஞ்சோலையம்மாளுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள். ஆனால், பூஞ்சோலை யம்மாளுக்கு மாத்திரம் இருக்கையே கொள்ளவில்லை. பொழுது ஏறிக்கொண்டே போனது பாம்பின் விஷம் தலைக்கேறுவது போலவே இருந்தது. அநேகமாய்க் கோகிலாம்பாள் கண்ண பிரானோடு பேசிவிட்டு அவனுக்காக வக்கீலை அமர்த்துவதற் காகவே போயிருக்க வேண்டுமென்றும், இல்லையாகில், அவ்வளவு அதிகமாக காலதாமதம் ஆவதற்கு வேறு காரண மில்லையென்றும், அவள் எப்படியும் சீக்கிரம் வந்துவிடுவாள் என்றும் அவள் ஆயிரம்தடவை நினைத்து நினைத்து ஆவலே வடிவாக மாறி நெருப்புத்தணல்களின்மேல் நிற்பவள்போலத் தத்தளித்திருந்தாள். பிற்பகல் நான்குமணியாய் விட்டது. அந்த