பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ: 63 அதற்குப்பிறகு ஒரு பெட்டி வண்டியில் ஒரு யெளவனப்பெண் அவரைப் பார்ப்பதற்காக இங்கே வந்ததா? நீங்கள் இப்போது எனக்குச் சொன்னதுபோல, அந்தப் பெண்ணுக்கும் சொன்னதன் மேல், பெண் திரும்பிப் போய் மாஜிஸ்டிரேட்டின் உத்தரவு பெற்றுக்கொண்டுவந்து உள்ளேபோய் இவரைப் பார்த்துவிட்டுப் போனதா? அதை மாத்திரம் சொல்லிவிடுங்கள். நான் போய் விடுகிறேன்” என்றான். அதைக் கேட்ட பாராக்காரன் சிறிது நேரம் பேசாமல் நின்று ஆழ்ந்து யோசனைசெய்து, "இங்கே இருக்கும் கைதிகளைப் பார்க்கவும், அவர்களுக்கு ஆகாரம் கொடுக்கவும் ஒரு நாளையில் எத்தனையோ ஜனங்கள் வருகிறார்கள் போகிறார்கள். ஆனாலும், இன்று காலையிலிருந்து வயசுப்பெண் யாரும் வரவில்லை” என்றான். • வேலைக்காரன், 'பெட்டிவண்டியில் யாரும் இங்கே வந்ததை நீங்கள் பார்க்கவில்லையே?’ என்றான். பாராக்காரன், 'பெட்டிவண்டியில் யாரும் வந்ததாக ஞாபகமில்லை' என்றான். "σή, அப்படியானால் நான் போய்வருகிறேன். மாஜிஸ்டிரேட்டின் வேலைக்காரன் கைகுவித்துக் கும்பிட்ட வண்ணம், உத்தரவைப் பெற்றுக்கொண்டு வருகிறோம்” என்று கூறியபின் அவ்விடத்தை விட்டுப்போய்ப் பெட்டி வண்டியை அடைந்து, தனக்கும் பாராக்காரனுக்கும் நடந்த சம்பாஷணை முழுவதையும் அப்படியே பூஞ்சோலையம்மாளிடம் கூறினான். கோகிலாம்பாள் காலையிலிருந்து அவ்விடத்திற்கும் வரவில்லையென்ற செய்தியைக் கேட்டதும் அந்த அம்மாளுக்கு இடி வீழ்ந்ததுபோல ஆய்விட்டது. அன்று காலையில் ஆனைகவுணி போலீஸ் ஸ்டேஷனை விட்டுச்சென்றபின் கோகிலாம்பாள் போலீஸ் ஸ்டேஷனுக்கும் போகாமல் சப்ஜெயிலுக்கும் போகாமல் வேறு எங்கே போயிருப்பாள் என்ற பெருத்த திகைப்பும் கலக்கமும் தோன்றி மனத்தை அபாரமாக உலப்பத்தொடங்கின. கண்ணபிரானது கடிதத்தைக் கொணர்ந்த மனிதன் ஏதாகிலும் துர் எண்ணத்தோடு அவளை எங்கேயாவது