பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 செளந்தர கோகிலம் உங்களுடைய பெட்டி வண்டியண்டை போய் உட்கார்ந்து கொள். இவர்கள் வந்த போது, முருகேசனை ஏதோ காரணத்தி னால் போலீஸ்காரன் பிடித்துக் கொண்டு போனானல்லவா அப்போது நீ ஏதோ ஒரு காரியமாய் தூரத்தில் வந்ததாகவும், அதைப் பார்த்து, வண்டியை ஒட்டுவதற்கு யாரும் இல்லையே என்று கவலைப்பட்டு, பெட்டி வண்டியைத் தொடர்ந்து வந்ததாகவும், நீயும் அவர்களுடைய வண்டிக்காரன் என்றும், இந்த அம்மாள் வருகிற வரையில் இருந்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போவதற்காகக் காத்திருப்பதாகவும் ஜெவான்களிடம் சொல், அவர்கள் அதை நம்பி சும்மா இருந்துவிடுவார்கள். வண்டியையும் குதிரையும் இருப்பதைப் பார்த்தால், எப்படியும் கோகிலாம்பாள், அந்திப் பொழுதுக்குள் வெளியில் வந்து வீட்டுக்குப் போவாள். எவ்வளவு நேரமானாலும், ஆகட்டும் என்று, நீ இவ்விடத்திலேயே இரு தெரிகிறதா?’ என்றார். மினியன், “இத்தானா ஒரு பெரமாதமுங்க. அப்பிடியே செய்யறேனுங்கே’’ என்று துடியாக மறுமொழி கூறினான். சுந்தரமூர்த்தி முதலியார், "இதுமட்டுமல்ல. நீ இன்னொரு காரியமும் செய்யவேண்டும். கோகிலாம்பாள் வெளியில் வந்து உன்னைக் கண்டால், அநேகமாய் உன்னை மாத்திரம் வண்டியை ஒட்ட அழைத்துக்கொண்டு, வேறே யாரையும் அழைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குப் போவாளென்பது நிச்சயம். நீ வண்டியை ஒட்டும் போது ஒரு காரியம் செய். அவர்களுக்குத் தெரிந்த மனிதர்கள் யாராவது பார்த்தால் வித்தியாசமாக நினைத்துக் கொள்வார்களென்றும், ஆகையால், வண்டியின் ஜன்னல்களை நன்றாக மூடிவிடும்படியும் சொல். அவள் அப்படியே செய்வாள். நீ வண்டியைப் பல தெருக்களின் வழியாகவும் ஒட்டி கடற்கரையோரமாக மயிலாப்பூருக்குப் போகும் பெரிய ரஸ்தாவோடு வந்து கோட்டைக்கு அப்பாலுள்ள மரத்தோப்பை அடைந்து, அவ்விடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ஒன்றுக்குப் போய் வருவதாகச் சொல்லிவிட்டு, பக்கத்திலுள்ள பாலத்தடியில் போய் உட்கார்ந்துகொள். ஒருவேளை நடுவழியில், கோகிலாம்பாள் உன்னைக் கூப்பிட்டு, "எங்கே வேறொரு பாதை வழியாகப் போகிறாயே” என்று