பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O4 செளந்தர கோகிலம்

கொண்டு வெட்டுவதைவிட, முளையாயிருக்கும் போதே நகத்தால் கிள்ளி எறிவது நல்லதென்று ஜனங்கள் சொல்லுவார் கள். அதுபோல, இந்த விஷயம் ஆரம்பிக்கும்போதே இதற்குத் தக்க பரிகாரம் தேடவேண்டும். பிறகு இவளுடைய துர்நடத்தை கள் அதிகரித்து எல்லோருக்கும் தெரிந்து சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துவிட்டால், அதற்குமேல் நாம் எவ்விதமான பரிகாரமும் செய்யமுடியாமல் போய்விடும். ஆகையால், இந்த விபரிதச் செய்தி எனக்கு இப்போது தெரிந்ததே நல்லதாயிற்று’ என்று கூறினாள். .

புஷ்பாவதியம்மாள் செளந்தரவல்லியம்மாளது கோபத்தைக் கண்டு நிரம்பவும் பயந்துவிட்டவள் போல நடித்து, “உனக்குத் தெரியாததற்கு நான் சொல்லிக் கொடுக்கப் போகிறேனா! நீயும் குழந்தையல்ல; நன்றாய்ப் படித்த புத்திசாலி. அதோடு மானத்தில் கண்ணுடையவள். உனக்கு நான் அதிகமாய் எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டியதே இல்லை. நீ பேசுகிற மாதிரியைப் பார்த்தால் உன் அக்காள் இன்று தாறுமாறாய் நடந்துகொண்ட விஷயத்தில் நீ ஏதாவது நடவடிக்கை எடுத்துக்கொள்ள உத்தேசிக்கிறாய் என்று நினைக்க வேண்டியிருக்கிறது’ என்று நயமாகக் கூறினாள்.

செளந்தரவல்லியம்மாள் மிகுந்த பதைப்பும் ஆத்திரமும் தோன்ற, “இல்லாவிட்டால், இதை யாராவது சும்மா விட்டு விடுவார்களா? இது என்ன சாதாரணமான விஷயமா? எங்கள் குடும்பத்தின் பெருமைக்கே ஹானி தேடக்கூடிய செய்கை அல்லவா இவள் ஒருத்தி இப்படிக் கெட்டுப் போனதைக் கண்டு ஜனங்கள் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவ்ரையும் அல்லவா துஷித்து இளக்காரப்படுத்திப் பேசுவார்கள். அது என்னைக்கூட பாதிக்கும் அல்லவா. அதற்கு நான் ஒருநாளும் இடம் கொடுக்க மாட்டேன். இவள் வரட்டும். அவசியம் நான் இவளுக்குத் தக்க சிrை நடத்தியே தீரப்போகிறேன். இன்றோடு இவள் இந்த வீட்டைவிட்டு ஒடிப்போக வேண்டும். அல்லது, அந்தத் துருக்கச்சி செய்ததுபோல இவளும் இரவோடிரவாய் ஒடி சமுத்திரத்தில் விழுந்து மாண்டுபோகவேண்டும்’ என்றாள்.