பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 105

புஷ்பாவதி முற்றிலும் இரக்கமாகவும் விசனமாகவும் பேசத் தொடங்கி, “அப்படியானால், என்னதான் செய்யப் போகிறாய்? நீ அவள்மேல் குற்றம் சுமத்தினால், தான் அப்படியொன்றும் செய்யவில்லையென்று அவள் மறுத்துவிடுகிறாள். அப்போது நீ என்ன செய்யப் போகிறாய்? அவளைக் கண்டிக்க இங்கே வேறே ஜனங்கள் ஒருவருமில்லை. உங்கள் தாயார் ஒருவர்தானே இருக்கப்போகிறார்கள். அவர்கள் மூத்த பெண்ணை ஒருக்காலும் விட்டுக்கொடுத்துப் பேசக்கூடியவர்களன்று’ என்றாள்.

செளந்தரவல்லியம்மாள் சிறிதுநேரம் யோசனைசெய்து, “இருக்கட்டும், நான் ஒரு காரியம் செய்கிறேன். நான் இப்போது நாலைந்து வேலைக்காரர்களைக் கூப்பிட்டு அவசரமாகத் துரத்தி குதிரை வண்டிகளில் ஏறிக்கொண்டு போகச் செய்கிறேன். இந்த ஊரில் எங்களுடைய சொந்தக்காரர்கள் ஏழெட்டு வீட்டார் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் கண்ணியமும், யோக்கிய தாபகrமும் வாய்ந்த தக்க பிரபுக்கள். கோகிலாம்பாளை இன்று காலை முதல் காணோமென்றும், அவளைத் தேடிக்கொண்டு போன அம்மாளும் திரும்பி வரவில்லை யென்றும், அவர்களுக்கு ஏதேனும் பெருத்த அபாயம் நேர்ந்திருக்க வேண்டுமென்று நான் அஞ்சுவதாகவும், நான் யெளவனப் பிராயத்துப் பெண்ணாய் இருப்பதால், நான் அவர்கள் இருவரையும் தேடிக்கொண்டுபோக முடியாமல் தவித்திருப்பதால் உறவினர்கள் எல்லோரும் உடனே புறப்பட்டு அவசரமாய் இங்கே வரவேண்டு மென்றும் நான் எங்கள் வேலைக்காரர்கள் மூலம் செய்தி சொல்லி அவர்களை உடனே துரத்தி விடுகிறேன். சுமார் ஐம்பது ஜனங்களாவது இங்கே உடனே வந்து கூடுவார்கள். அவர்கள் புறப்பட்டு இங்கே வந்து சேர எட்டரை அல்லது ஒன்பது மணியாவது பிடிக்கும். அதற்குள் அம்மாள் வந்துவிடுவார்கள். வந்தவுடன் வேலைக் காரர்களையும் வேலைக்காரிகளையும் வைத்துக்கொண்டு நாம் கேட்போம். கோகிலாம்பாளை அவர்கள் காலையில் எங்கள் சொந்தக்காரர் வீட்டுக்கு அனுப்பியதாகவே சொல்வார்கள். அந்தச் சொந்தக்காரர்கள் யாரென்று நாம் கேட்போம். அவர்கள் யாராவது ஒருவருடைய பெயரைக் குறித்து, அவர்கள்தான் கடிதம் எழுதியனுப்பியதாகச் சொல்வார்கள். பிறகு