பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 செளந்தர கோகிலம்

வழியாகப் பிரயாணம் செய்தாரோ அவைகளைவிட்டு வேறு வழியாகச் சென்று இடையிலுள்ள rேத்திரங்களில் தங்கி தீர்த்தாடனம் சுவாமி தரிசனம் முதலியவற்றைச் செய்து கொண்டே சுலபமாகவும் மெதுவாகவும் ஒரு நாளைக்குச் சொற்ப தூரம் நடந்து சுமார் இருபது தினங்களுக்குப் பிறகு ஒருநாள் பிற்பகலில், தமது ஜென்ம பூமியாகிய திருவடமருதுாருக்குப் போய்ச் சேர்ந்தார். அந்த ஊரை வெகு தூரத்திற்கப்பால் காணும்போதே, சிதம்பரத்தைக் கண்ட நந்தனார் எவ்வாறு உள்ளங் குளிர்ந்து உவகை பூத்து ஆநந்தபரவசம் அடைந்து இன்பமும், துன்பமும், ஆவலும், சந்தோஷமும் கொண்டு மெய்ம்மறந்து துடிதுடித்தாரோ, அதுபோல நமது திவான் சாமியாரும் தமது மனவெழுச்சியைத் தாங்க மாட்டாதவராய்த் தவித்துத் தத்தளிக்கலானார். பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த தமது தந்தையைத் தாம் காணப்போகிறோம் என்ற ஆசையினாலும் சந்தோஷத்தினாலும் அவரது மனம் பொங்கியெழுந்து துடித்தது. அவர் தமது இளைய மனைவியுடன் சந்தோஷமாகவும் rேமகரமாகவும் இருப்பார், இவருக்கு இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்து அழகாய் வளர்ந்திருக்கும், தாம் தூரத்திலிருந்தபடியே அவைகளைப் பார்த்து ஆநந்தம் அடையலாம் என்று அவர் பலவாறு எண்ணி எண்ணி இன்பக் கனவு கண்டபடி மெய்ம்மறந்து நடந்தார். அதுவுமன்றி, தாம் சமாசாரப் பத்திரிகையில் பிரசுரித்த விளம்பரத்திற்கு ஏதேனும் மறுமொழிக்கடிதம் வந்து தபால் ஆபீசில் இருக்கலாமென்றும் அதன் மூலமாய்த் தாம் தமது அருங்குணப் புதல்வன் இருக்கும் இடத்தை அறிந்து, அவ்விடம் சென்று அவனைக் கண்டு நெடுங்காலமாய்த் தமக்கு இல்லாமல் போயிருந்த பேரின்டத்தை அநுபவிக்கலாம் என்றும் அவர் உறுதியாக நம்பி, அதைக் குறித்தும் மிகுந்த ஆவலும் பதைபதைப்பும் தாங்க வொண்ணாத மனக்கிளர்ச்சியும் அடைந்தவராய் நடந்து தமது சொந்த ஊரை அடைந்தார். ஊருக்குள் நுழைந்த பொழுதே இன்னதென்று விவரிக்க இயலாத ஒருவித இன்பம் அவரது உச்சி முதல் உள்ளங்கால் வரையில் பரவியது. உரோமம் சிலிர்த்தது. அவர் ஆநந்தபரவசம் அடைந்தவராய்ச் சென்றார். பழைய இடங்களை யும், கோவில்களின் மதில்களையும், கோபுரங்களையும்,