பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 செளந்தர கோகிலம்

என்று கூறியவண்ணம், அப்படியே மயங்கித் திண்ணையில் படுத்துவிட்டார். உண்மையிலேயே அவர் அலுப்பினால் அவ்வாறு சயனித்துக் கொண்டார் என்று நினைத்துக்கொண்ட அந்த ஸ்திரீ தனது வீட்டு அலுவல்களைக் கவனிக்க உள்ளே போய்விட்டாள்.

திவான் முதலியார் பேச்சு மூச்சு முதலிய உயிர்ச் சின்னங்களற்று சவம் போலத் திண்ணையிலேயே மயங்கிப் படுத்திருந்து, வெகு நேரம் கழித்துத் தாமாகவே தெளிவடைந்து எழுந்து உட்கார்ந்தார். தாம் அப்போது எழுபது வயதடைந்த கிழவர் போலாய்விட்டதாக அவர் உணர்ந்தார். அவரது சீவனில் பெரும் பாகமும் போய்விட்டதென்றே கூறவேண்டும். தமது உயிர் அதிக நாட்கள் நில்லாதென்றும், வெகு சீக்கிரத்தில் அது தமது உடலை விட்டுப்பிரிந்து போய்விடும் என்றும் அவரது மனத்தில் ஒர் எண்ணம் தோன்றி மேலாடியது. இந்த உலகம் பாழ்த்து ஒரே இருள்மயமாக அவருக்குத் தோன்றியது. பசி தாகம் முதலிய எவ்வித தேகபாதையும் உண்டாகவில்லை. அவருக்கு எல்லாம் துக்க மயமாகவும் துன்ப நிறைவாகவும் தோன்றியது. தாம் அதற்குமேல் அந்த ஊரில் இருப்பது தகாதென்று நினைத்து அவர் உடனே அவ்விடத்தைவிட்டு எழுந்து நடந்து பிரயாணமாய் விட்டார். இன்ன திசையில் போகிறோம் இன்ன ஊருக்குப் போகிறோம் என்பதையே உணராமல் தூக்கத்தில் நடப்பவர் போல அவர் நடைப் பிணமாய்ச் சென்றுகொண்டே இருந்தார். அவர் தகப்பனாரது வாழ்க்கை அவ்வாறு சீர்குலையவும், முடிவில், அவர் இறந்துபோகவும் காரண பூதராயிருந்தது தாமே என்ற நினைவு தோன்றத் தோன்ற, தாம் நரகத்தை அடைவதைத் தவிர வேறு பிராயச்சித்தம் இல்லவே இல்லையென்றும் அவர் எண்ணிக் கொண்டவராய்த் தமக்கு எதிரில் காணப்பட்ட ரஸ்தாவோடு வெகுதூரம் நடந்து பக்கத்திலிருந்த ஒர் ஊரையடைந்து ஒரு சத்திரத்தில் படுத்து அன்றைய இரவைப் போக்கினார்.

அதன் பிறகு அவர் இரண்டு நாட்கள் வரையில் அன்னம் தண்ணீரின்றி நடந்து எவ்விடத்திலும் இருக்கைகொள்ளாதவராய் ஊரூராய்த் திரிந்து அப்படியே பட்டினி கிடந்து தாம் தமது