பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் 127

உயிரை மடித்துக் கொள்வதே தாம் செய்யத்தக்க காரியம் என்ற தீர்மானத்தோடு வெகு தூரம் பிரயாணம் செய்து மூன்றாவது நாள் மாலையில் ஒரு சத்திரத்தை அடைந்த சமயத்தில் சகிக்க வொண்ணாத நாவறட்சியினால் களைத்து மூர்ச்சித்து நடுப் பாதையில் அப்படியே வேரற்ற மரம் போலச் சாய்ந்துவிட்டார். பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள் பலர் அந்த விபரீதக் காட்சியைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து ஓடிவந்து அவரைத் தாக்கி எடுத்துப் பக்கத்திலிருந்த சத்திரத்துத் திண்ணையில் கொண்டுபோய்ப் படுக்கவைத்து வாயில் தண்ணிரை வார்த்து அவரது மயக்கத்தைத் தெளியவைத்து அவருக்கு அங்கு கிடைத்த ஆகாரம் சொற்பம் கொடுத்து வற்புறுத்தி உண்ணச் செய்துவிட்டுப் போயினர். அன்றிரவில் அந்தத் திண்ணையில் படுத்திருந்த திவான், “ஆகா! பட்டினி கிடந்து இந்த உயிரை மடித்துவிட நினைத்து வந்தேன். நடு ரஸ்தாவில் மயக்கம் என்னைத் தள்ளிவிட்ட நினைவிருக்கிறது. அப்படியே நான் கொஞ்ச நேரம் கிடந்தால் என் உயிர் போயிருக்குமே. இவர்கள் ஏன் என்னை மறுபடி பிழைக்க வைத்தார்கள். மனிதர்கள் இல்லாத நடுவழியில் நான் விழுந்து இறந்திருக்கக் கூடாதா! இன்னமும் நான் பிழைத்திருந்து மேன்மேலும் என்னென்ன துன்பங்களை அநுபவிக்கக் கடவுள் திருவுளம் பற்றியிருக் கிறாரோ தெரியவில்லையே! சம்போ சங்கரா பரம்பொருளே! இதுவரையில் நான் அனுபவித்த தண்டனை போதாதா? நான் செய்த பாவமலை இன்னமும் பாக்கி இருக்கிறதா? ஈசா! பரமேசா என்னப்பனே! காருண்ய மூர்த்தியே! என்னால் தாங்க முடியவில்லையே என்னப்பனே! என்னை இவ்வளவோடு கூ மித்து உன் பாதாரவிந்தங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டுமப்பனே! உன்னையன்றி எனக்கு வேறே புகலிடம் எங்கிருக்கிறது? இந்த நாயேனை இனி இப்புவியில் வைத்திருப்ப தில் யாருக்கு என்ன உபயோகம்! போதும், போதும், தீனதயாளுவே! இன்றிரவு நான் தூங்குவது இனி விழிக்காத கடைசித் துாக்கமாய்ச் செய்துவிடவேண்டும். என் அண்ணலே! காருண்ய வள்ளலே!” என்று கடவுளை நினைத்து நினைத்து உருகிய வண்ணம் படுத்து நித்திரை செய்து அன்றைய இரவைக் கழித்துவிட்டு மறுநாள் காலையில் எழுந்து மறுபடி பிரயாணம்