பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 செளந்தர கோகிலம்

யோசித்து யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் தோன்றவில்லை. அவர்களுடைய பிரியப்படி நான் செய்வதைத் தவிர வேறு நான் என்ன செய்வதென்பது தோன்றவில்லை. நான் துணிகளையும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் வாங்கிக்கொண்டு அந்த ஊரை விட்டே வந்துவிட்டேன். தோட்டி தொட்ட துணியை வாங்கு வது அருவருப்பாக இருந்தது. அதனால், நான் நிர்வாணமாக இருந்தேன். ஆகையால், குளிர் என்னால் தாங்க முடியவில்லை. ஆகையால், பொழுது விடிகிற வரையிலாவது அவைகளை வைத்திருந்து பிறகு வேறு வேஷ்டிகள் வாங்கிக்கொண்டு அவைகளை எறித்துவிடலாம் என்று நினைத்து அவைகளை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். அதுமுதல் நான் ஊரூராய் அலைந்தேன். என்னிடமிருந்த பணத்தை நான் முன்னே சொன்னபடி ஒரு பரதேசி அபகரித்துக் கொண்டு போய் விட்டான். அதன்பிறகு தகரக் குவளை, கோவணம், கந்தைத் துணி, மூங்கில் குச்சி, rயரோகம் ஆகிய ஐந்து பொருள்களும் எனக்குத் துணையாக மிஞ்சி நின்றன. நான் ஊரூராய்ப் பிச்சையெடுத்து எப்போது இந்த உயிர் உடலை விட்டுப் போகுமென்று வழி பார்த்துக்கொண்டே இருந்த நிலைமையில் ஆண்டவனைப்போல நீங்கள் வந்து என்னுடைய துன்பங் களைப் போக்கி என் மனசைக் குளிரச் செய்தீர்கள். அதனால் தான் நான் எனக்கு மறுபடி சுக்கிர தசை ஆரம்பிக்கிறதோ என்றேன்’ என்றார்.

அந்த மகா ஆச்சரியகரமானதும் எங்கும் நடவாததுமான கதையைக்கேட்டு திவான் சாமியார் முற்றிலும் ஸ்தம்பித்து திக்பிரமை கொண்டு கல்போலச் சமைந்து போய் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்தபின், ‘ஐயா! உங்கள் வரலாற்றைப்போல் எங்கும் நடந்ததாக நான் இதுவரையில் என் காதாலும் கேட்டதே இல்லை. உங்களுடைய சம்சாரம் இப்படியும் செய்தார்களா வென்பது எனக்கு நம்பிக்கைப் படவில்லை, அந்த அம்மாள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?’ என்றார்.

கிழவர், “அவள் எங்கே இருந்தால் எனக்கென்ன? இப்படியெல்லாம் அவள் செய்த பிறகு அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ளவும், அவளுடைய