பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14-வது அதிகாரம் தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார்

வான் மயங்கிச் சாய்ந்து விட்டதைக் கண்ட

குஞ்சிதபாத முதலியார் வியப்பும் கலக்கமும் ல் அடைந்து தமது வரலாறு. அவ்வளவு தூரம் ‘: மனத்தைப் புண்படுத்த வேண்டிய காரணம் எதுவாக இருக்கும் என்றும், ஒரு கால், அவர் தமக்கு அதற்கு முன் பழக்கமான மனிதராய் இருப்பாரோ என்றும் எண்ண மிட்டபடி அவரது முகத்தை உற்று நோக்கினார். திவானின் முகம் முழுதும் பெருத்த புதர் போல இருந்த சடைகளினாலும் தாடி மீசைகளினாலும் முற்றிலும் புதைபட்டுப் போயிருந்தது. ஆகையால், அவர் இன்னார் என்ற அடையாளம் சொற்பமும் தெரியாமல் போய்விட்டது. ஆயினும், அவர் சும்மா இராமல் திவானண்டை நெருங்கி உட்கார்ந்து பக்கத்தில் கிடந்த ஒரு வாழை இலைத் துண்டை எடுத்து திவானின் முகத்திற் கருகில் வீசி காற்றை உண்டாக்கியபடி அன்பு ததும்பிய குரலில் பேசத் தொடங்கி, ‘சுவாமிகளே சுவாமிகளே! ஏன் ஒரு மாதிரியாகச் சாய்ந்து விட்டீர்கள்? உடம்பில் ஏதாவது தொந்தரவு உண்டா? சுவாமிகளே! சுவாமிகளே! தாகத்திற்குச் சாப்பிடுகிறீர்களா? நான் போய்த் தண்ணிர் கொண்டு வந்து தரட்டுமா என்று அன்போடு கூறினார். அப்பொழுது திவான் சாமியார் மயக்கமும் தெளிவும் கலந்த நிலைமையில் இருந்தமையால், குஞ்சிதபாத முதலியார் கூறிய சொற்கள் கிணற்றிற்குள்ளிருந்து பேசப்படுவது போல திவான் சாமியாருக்குச் சொற்பமாகக் கேட்டது. ஆயினும் அவர் அதற்கு உடனே மறுமொழி கொடுக்க இயலாதவராய்த் தமது

S)