பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 செளந்தர கோகிலம்

நான் ஒருவாறு திருப்தியடைந்து யாத்திரை சென்றுவிட்டேன். இப்பொழுது உங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையினால் தூண்டப்பட்டே நான் வடக்கிலிருந்து திரும்பி வந்தது. வந்து திருவடமருதூருக்குப் போய் விசாரித்ததில் இரண்டு வருஷ காலத்திற்கு முன்பே நீங்கள் இறந்து விட்டீர்கள் என்ற மகா துக்ககரமான செய்தியைக் கேட்டு மனமுடைந்து நானும் இனி பட்டினி கிடந்து இறந்து போவதென்ற தீர்மானத்துடன் வந்து கொண்டிருக்கையில் சர்வேசுவரன் உங்களை என் வழியில் கொண்டுவந்து விட்டார். கடவுள் அப்படிச் செய்தது நான் உங்களை இனி என் சவரக்ஷணையில் வைத்துப் பாதுகாக்க வேண்டுமென்று எனக்குக் கட்டளை இடுவதாக நான் எண்ணுகிறேன். நானும் உங்கள் குமாரனும் இரண்டறக் கலந்து ஒருவராகவே இருந்தோம். ஆகையால் நீங்கள் இனி என்னை உங்களுடைய சொந்தக் குமாரனென்றே எண்ணிக் கொள்ள வேண்டும். என்னை நீங்கள் மரியாதையான பதங்களால் அழைக்காமல், “அடேய் மோகலிங்கம்!” என்று என் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும். நான் உங்களை இனி, “அப்பா’ என்றுதான் கூப்பிடப் போகிறேன். அதை நீங்கள் குற்றமாகக் கருதக் கூடாது. அதுவுமன்றி இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. உங்கள் குமாரர் மறைந்துபோன காலத்தில், அவருடைய பணத்தில் ஒரு பாகம் என் வசத்தில் இருந்தது. அது இப்போதும் என்னிடத்தில்தான் இருக்கிறது. அது முழுதும் உங்களையே சேர வேண்டியது. ஆகையால், அதை நான் உங்களுடைய தேகபோஷணையின் பொருட்டே உபயோகிக்கப் போகிறேன். தங்களுக்கு எந்த ஊரில் இருக்கப் பிரியமோ, அந்த ஊரில் வசதியான ஒரு வீட்டை நாம் அமர்த்திக் கொள்வோம். உங்களுக்குத் தேவையான வேலைக்காரர்களையும் வேலைக்காரி களையும் நான் நியமித்துத் தருகிறேன். உங்களுக்கு ஏற்பட்டுள்ள தேகப் பிணியை நீக்கத் தக்க வைத்தியரைக் கொண்டு ஒளஷதம் கொடுத்து உங்களைத் தேற்றவும் நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் இனி எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் ஈசுவரத் தியானம் செய்தபடி செளக்கியமாகக் காலம் தள்ளுங்கள்’ எனறாா.