பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 161

ஒருவேளை அவருக்குத் தெரிந்தாலும் தெரியலாமல்லவா?” என்றார்.

அதைக்கேட்ட ஸ்திரீ சிறிதுநேரம் ஆழ்ந்து யோசனை செய்தபின், ‘சுவாமிகளுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. இறந்து போன பெரிய மனிதருடைய படமாயிற்றேயென்றும், அவரைச் சேர்ந்தவர்களிடம் இதைக் கொடுத்தால் அவர்கள் நிரம்பவும் சந்தோஷம் அடைவதன்றி, இதை ஒரு பெரிய நிதிபோல எந்நாளும் வைத்துப் பாராட்டுவார்களேயென்றும் நீங்கள் எண்ணுகிறீர்கள். இவர்கள் அப்படிப்பட்ட தக்க மனிதர்களாக எனக்குப் படவில்லை. பெண்ணின் தகப்பனார் கேவலம் தவசிப் பிள்ளை வேலை செய்தவர். கிழவர் வேறே வார்சு இல்லாமல் இருப்பதோடு அபாரமான ஐசுவரியத்தை வைத்துக் கொண்டிருக் கிறாரே யென்றும், அதையெல்லாம் அடைய வேண்டுமென்றும் நினைத்தே அவர் தம்முடைய பெண்ணைக் கிழவருக்குக் கட்டிக் கொடுத்தார். அவருடைய கோரிக்கை சுலபத்தில் நிறைவேறியது. கிழவரும் வெகு சீக்கிரம் பரலோகப் பிராப்தி யடைந்து விட்டார். சனியன் தொலைந்ததென்றும் சங்கடம் விலகியதென்றும் நினைத்து இரட்டை சந்தோஷத்தோடு பணத்தை எடுத்துக் கொண்டு அவர்கள் எங்கேயோ போய்விட்டார்கள். அந்தக் கிழவருடைய படம் இல்லையென்று அவர்கள் அழுகிறார்களா! அவர்களிடம் இதுபோய்ச் சேர்ந்தால்தான், இதை அவர்கள் இலட்சியம் செய்யப்போகிறார்களா அதுவுமில்லை. ஒரு வேளை இதுபோன்ற படம் அவர்களிடம் ஏற்கெனவே இருந்தாலும் இருக்கலாம். ஆகையால் நாம் படும்பாடு வீண்பாடாக முடியுமே தவிர வேறில்லை. அவர்களுடைய பூர்வீகமான ஸ்தலம் இன்னது என்பது எனக்குத் தெரியாது. இந்த ஊரிலுள்ள மற்ற பிரமுகர் களிடம் விசாரித்துப் பார்த்தால் அது ஒருவேளை தெரிந்தாலும் தெரியலாம். நான் பெண் பிள்ளையாகையால், அவ்வளவு தூரம் துணிந்து நான் அந்த விசாரணையைச் செய்வது உசிதமல்ல. என் புருஷர் ஊரில் இருந்தாலும் அவரைக் கொண்டு விசாரித்துப் பார்க்கச் சொல்லுவேன். அவருமில்லை; ஆகையால், நீங்கள்தான் நேரில் அதைச் செய்ய வேண்டும். அவர்களுடன் இன்னார்தான் சிநேகமாயிருந்தார்கள், இன்னார் சிநேகமாக இல்லையென்று நான் சொல்ல முடியாது. கிழவர் உயிரோடிருந்த வரையில், செ.கோ.H-11